`படிப்புதான் பிள்ளைகளுக்கான சொத்து...’- 100 வயதில் துடைப்பம் விற்று டொனேஷன் வழங்கிய சீனர்!

`படிப்புதான் பிள்ளைகளுக்கான சொத்து...’- 100 வயதில் துடைப்பம் விற்று டொனேஷன் வழங்கிய சீனர்!
`படிப்புதான் பிள்ளைகளுக்கான சொத்து...’- 100 வயதில் துடைப்பம் விற்று டொனேஷன் வழங்கிய சீனர்!

சீனாவில் நூறு வயதான முதியவரொருவர், கடந்த 10 வருடங்களில் தான் சேமித்த மொத்த பணத்தை ஏழை மாணவர்கள் கல்விக்காக வழங்கி அனைவரையும் நெகிழச் செய்துள்ளார்.

சீனாவை சேர்ந்த ஜின் ஜுஷுன் (Jin Zhushun) என்ற 100 வயது முதியவர், கடந்த 10 வருடமாக துடைப்பம் விற்று சுமார் 50,000 யுவான்களை சேமித்துள்ளார். இது இந்திய மதிப்பில் ரூ.5.89 லட்சம் ரூபாய் வரை வருகின்றது. இந்தப் பணத்தை 5 மாணவர்களுக்கு கல்வி உதவியாக பிரித்து கொடுக்க அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். ஏழை மாணவர்கள், தங்களின் அடிப்படை படிப்பு செலவைகூட பூர்த்தி செய்யமுடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு இப்பணம் செல்ல வேண்டும் என்று அந்த முதியவர் கேட்டுக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்த பணத்தை சேமிக்க, கடந்த 9 ஆண்டுகலில் 5,000 துடைப்பங்களை தான் விற்றதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார். தான் சிறுவயதில் வறுமை காரணமாக படிக்க முடியாமல் போனதாகவும், அதனாலேயே இப்போது கல்வி கற்கும் ஏழை மாணவர்களுக்கு உதவ நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய 100-வது வயதில் ஏதாவது அர்த்தமுள்ள விஷயத்தை சமூகத்துக்கு செய்ய வேண்டும் என்பதற்காகவே இதை செய்வதாகவும் அவர் சீன ஊடகத்தில் பேட்டியளித்துள்ளார்.

இவரது நிதி உதவி செல்ல உள்ள 5 மாணவர்களும், சமீபத்தில் அங்குள்ள தேசிய கல்லூரி நடத்திய நுழைவுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களாவர்.

100 வயதிலும், உழைத்த பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ள முதியவரின் இச்செயலை பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com