இதுக்கா இவ்ளோ பெரிய யுத்தம்! மணமேடையில் மணமகளுக்கு முத்தம் கொடுத்த மணமகன்.. அடிதடியாகி 6 பேர் காயம்!

உத்தரப்பிரதேசத்தில் திருமணத்தின் போது மணமகளுக்கு மணமகன் முத்தம் கொடுத்ததால் இரு குடும்பங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு வரை சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம்
திருமணம்pt web

உத்தரப்பிரதேசத்தில் ஹபூரின் அசோக் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. திங்கட்கிழமை இரவு மணமகளின் தந்தை தனது இரு மகள்களின் திருமணத்தையும் நடத்த எண்ணி இருந்தார். முதல் திருமணம் எவ்வித பிரச்சனையும் இன்றி நடந்தது. இரண்டாவது திருமணத்தின் போது மணப்பெண்ணிடம் மணமகன் தனது அன்பை வெளிப்படுத்தியது தான் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

திருமணத்தின் வர்மாலா சடங்கின் போது, மணமகன் மணபெண்ணிற்கு முத்தம் கொடுத்துள்ளார். மணமகன் செயலால் ஆத்திரமடைந்த பெண் தரப்பினரால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இது அடிதடியாகவும் மாறியது. இந்த மோதல் காரணமாக மணமகளின் தந்தை உட்பட 6 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணம்
இஸ்லாமிற்கு மாறாவிட்டால், AI மூலம் ஆபாச Videoவை உருவாக்கி வெளியிடுவேன்” - பெண்ணை மிரட்டிய மர்மநபர்!

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினருக்கு இரவு 1.30 மணியளவில் தகவல் கிடைத்தது என ஹபூர் ஏஎஸ்பி ராஜ்குமார் அகர்வால் தெரிவித்தார். இதுவரை இரு தரப்பில் இருந்தும் இதுவரை எழுத்துப்பூர்வ புகார்கள் ஏதும் வரவில்லை என்றும், அப்படி புகார் வந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனர். மணமகன் குடும்பத்தினர், மணமகள்தான் முத்தம் கொடுக்க சொன்னதாக கூறும் நிலையில், மணமகள் குடும்பத்தினரோ மணமகன்தான் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்ததாக தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக காவல் அதிகாரி ராஜ்குமார் அகர்வால் கூறுகையில், “இரு தரப்பு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் மணமகள் மற்றும் மணமகன் இருவரும் திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்தனர். இருதரப்பு குடும்பத்தினரும் திருமணத்தை நிறுத்திய நிலையில், பெரியோர்கள் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். திருமணத்தின் தேதியை மாற்றியமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.

திருமணம்
AIIMS மருத்துவமனைக்குள் காருடன் புகுந்த போலீஸ்... பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மருத்துவர் கைது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com