\
traffic rules
traffic rulesreuters

டிராஃபிக் விதியை மீறினீங்களா? இனி மின் கட்டணத்துடன் அபராதம்? உச்சநீதிமன்றத்தின் புதிய யோசனை!

போக்குவரத்து விதிகளை மீறியதற்காக விதிக்கப்பட்டு, நிலுவையில் இருக்கும் அபராதத் தொகையை வசூலிக்க புதிய யோசனை ஒன்றை உச்சநீதிமன்றம் முன்மொழிந்துள்ளது.
Published on: 
Summary

நாட்டில் போக்குவரத்து விதிமீறலால் இ-சலான்கள் மூலம் வசூலிக்க வேண்டிய அபராதம் ரூ.45,000 கோடி என்ற நிலையில், ரூ.20,000 கோடி நிலுவையில் உள்ளது. இதை வசூலிக்க, மின் கட்டணத்துடன் அபராதத்தை இணைத்து, செலுத்தாவிட்டால் மின் இணைப்பை துண்டிக்கும் வாய்ப்பை மாநிலங்கள் பரிசீலிக்கலாம் என உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. இதனால் விதிமீறல் கட்டுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

சாலையில் போக்குவரத்து விதிகளை மீறினால்... போலீசார் அபராதம் விதிப்பார்கள்... இ-சலானும் வரும்... இதனை பலரும் செலுத்திவிடுவார்கள். ஆனால், சிலர் “பிறகு பார்த்துக்கொள்ளலாம்... சேர்த்து கட்டிக்கொள்ளலாம்...” என அபராதத்தைச் செலுத்தாமல் விட்டுவிடுவார்கள். இப்படி, போக்குவரத்து விதிகளை மீறியதற்காக விதிக்கப்பட்டு, நிலுவையில் இருக்கும் அபராதத் தொகையை வசூலிக்க புதிய யோசனை ஒன்றை உச்சநீதிமன்றம் முன்மொழிந்துள்ளது.

electricity bill
electricity billreuters

போக்குவரத்து விதிமீறல்களை மின்னணு முறையில் அமல்படுத்துவது மற்றும் நிலுவையில் உள்ள அபராதங்களை வசூலிப்பது தொடர்பான வழக்கை, நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, நாடு முழுவதும் இ-சலான்கள் மூலம் சுமார் ₹45,000 கோடி தொகை வசூலிக்க வேண்டிய நிலையில், இதுவரை சுமார் ₹25,000 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சுமார் ₹20,000 கோடி வசூலிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

traffic rules
LNG ரயில் அறிமுகம்! இந்தியாவில் இதுதான் முதல்முறை!

இதனைக் கேட்ட நீதிபதிகள், நிலுவையில் உள்ள இ-சலான்களின் அபராதத் தொகையை மின் கட்டணத்துடன் இணைத்து வசூலிப்பது குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பரிசீலிக்கலாம் எனக் கூறினர். அதாவது, போக்குவரத்து அபராதத்தை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தால், அந்தத் தொகையை மின்சாரக் கட்டண நிலுவையுடன் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கலாம். அவ்வாறு சேர்க்கப்பட்ட தொகையையும் செலுத்தாமல் இருந்தால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்பதால், அபராதத்தை வசூலிக்க இது ஒரு வழியாக அமையுமா என்பது குறித்து அரசு ஆலோசிக்கலாம் என நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. இதுமட்டுமல்லாமல், அபராதம் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கும் வாகனங்களுக்கு எதிராக மேலும் பல நடவடிக்கைகளையும் நீதிமன்றம் பரிசீலிக்கச் சொல்லியுள்ளது.

power cut
power cutreuters

அதன்படி, நிலுவையில் அபராதம் உள்ள வாகனங்களை Parivahan தளத்தில் பிளாக் லிஸ்ட் செய்வது, வாகன உரிமை மாற்றத்தைத் தடுப்பது, வாகனப் பதிவு புதுப்பிப்பு, ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு, Fitness மற்றும் PUC சான்றிதழ்களைப் புதுப்பிப்பது உள்ளிட்டவற்றில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலுவையில் உள்ள சலான்களுடன் இயக்கப்படும் வாகனங்களைக் கண்டறிய சாலைகளில் Random Checks நடத்துவது குறித்தும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் அபராதம் செலுத்தாமல் தொடர்ந்து சாலையில் இயக்கப்படும் வாகனங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் எனக் கருதப்படுகிறது. இப்படி, சாலையில் விதிமீறல் செய்துவிட்டு அபராதத்தைச் செலுத்தாமல் இருப்பவர்களிடம் இருந்து நிலுவைத் தொகையை வசூலிக்க பல்வேறு வழிகளை உச்சநீதிமன்றம் பரிசீலித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

traffic rules
காஷ்மீர் பேரவையில் அனல்.. காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி அதிரடித் தீர்மானம்! என்ன நடந்தது?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com