இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்file image

காலை தலைப்புச் செய்திகள்: பள்ளிகளுக்கு விடுமுறை முதல் மண் சரிவில் புதையுண்டவர்களின் உடல் மீட்பு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை முதல் மண் சரிவில் புதையுண்டவர்கள் உடல் மீட்பு வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
Published on
  • விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. புதுச்சேரியிலும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிப்பு.

  • சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

  • ஃபெஞ்சல் புயலின் தாக்கம் எதிரொலி காரணமாக, கள்ளக்குறிச்சி, அரியலூர், சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை.

  • மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உளுந்தூர்பேட்டையிலிருந்து விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்.

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழைpt web
  • திருவெண்ணெய்நல்லூர் மலட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்கள். மரத்தில் சிக்கிய மூவரை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை.

  • விழுப்புரம் வராஹி அம்மன் கோயிலை வெள்ளம் சூழ்ந்த நிலையில், சிக்கித் தவிக்கும் பக்தர்கள்.

  • கனமழையால் விழுப்புரம் மாவட்டம் வி. சாத்தனூர் பகுதி தீவு போல் மாறியது. இறந்தவர்களின் உடல்களை எரியூட்ட கூட முடியாமல் மக்கள் கடும் சிரமம்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
கனமழை பாதிப்பு: நாளை எங்கெங்கு விடுமுறை? 1 நிமிடத்தில் Full Details!
  • திருவண்ணாமலை மண் சரிவில் புதையுண்டவர்களில் 5 பேரின் உடல்கள் மீட்பு. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் பேட்டி.

  • திருப்பத்தூரில் மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் தவறிவிழுந்து 9 வயது சிறுவன் உயிரிழப்பு.

  • ஃபெஞ்சல் புயலால் 14 மாவட்டங்களில் ஒன்றரை கோடி பேர் பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 2 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

  • திமுக ஆட்சியில் மக்கள் தூக்கம் தொலைத்துள்ளனர் என முதலமைச்சரின் விமர்சனத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிகோப்புப்படம்
  • தமிழகம் முழுவதும் பெய்த கனமழையால் இரண்டு லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் புதிய தலைமுறைக்கு பேட்டி.

  • தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு. புதுச்சேரியில் ஆற்றை ஒட்டியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தண்ணீரில் தத்தளிப்பு.

  • புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம். அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.

  • தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
“நெஞ்சைப் பதற வைக்கிறது..” திருவண்ணாமலை துயரச் சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் வேதனை!
  • மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தனித்தனியே சந்தித்த தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே. என்.நேரு. ஜி.எஸ்.டி நிலுவை தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்ததாக தகவல்.

  • சீக்கிய மதத்துக்கு எதிராக செயல்பட்டதாக பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது புகார்.

  • சபரிமலையில் விட்டு விட்டு பெய்யும் மழையிலும், ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள்.

  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்களுக்குள் அதிருப்தி எனத் தகவல். ஆனால், பூசல் இல்லை என மறுக்கிறார் முன்னணி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com