Headlines | அறிமுகம் செய்யப்பட்ட மசோதா முதல் - தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் வரை!
மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்தார் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக்கூறி கடும் விமர்சனத்தை முன்வைத்தும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
புதிய மசோதா அரசமைப்பிற்கு முரணாணது அல்ல என உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம். மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விரிவான விவாதத்திற்கு அனுப்பப்படும் எனவும் அறிவிப்பு.
உலக செஸ் சாம்பியன் குகேஷ்-க்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் 5 கோடி ரூபாய்க்கான காசோலையை பரிசாக வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
செஸ் விளையாட்டை ஊக்குவிக்க, HOME OF CHESS என்ற பெயரில் சிறப்பு அகாடமி அமைக்கப்படும் என்றும் அறிவிப்பு.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக, தவெக என யார் வந்தாலும் மகிழ்ச்சிதான் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேட்டி.
கேரளாவில் இருந்து கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதாக தொடரும் குற்றச்சாட்டுகள் எதிரொலி. புளியறை சோதனைச் சாவடியில் தீவிர கண்காணிப்பில் காவல்துறை.
சென்னையில் அதிவேகமாக சென்ற கார், பிரேக் பிடிக்காமல் கடலுக்குள் பாய்ந்து விபரீதம். காருக்குள்ளிருந்த கடலோர காவல் படை அதிகாரி தப்பிய நிலையில் மூழ்கிய ஓட்டுநரை தேடும் பணி தீவிரம்.
புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத், பெங்களூருவுக்கு வரும் 20ஆம் தேதி முதல் மீண்டும் விமான போக்குவரத்து. 78 இருக்கைகள் கொண்ட விமான சேவையை தொடங்குகிறது இண்டிகோ நிறுவனம்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வழக்கு. சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.
சீன வெளியுறவுத்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல். இரு நாட்டு எல்லையில் இயல்பு நிலையை கொண்டு வருவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ஹிஜாப் தொடர்பான கடுமையான விதிகள் கொண்ட புதிய சட்டத்தை அமலாக்குவதை நிறுத்திவைத்தது ஈரான் அரசு. போராட்டங்கள் மீண்டும் வெடிக்கலாம் என கருதி நடவடிக்கை.
வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடங்கள். இதனால், கார்கள் நசுங்கின. மேலும், 14 பேர் உயிரிழந்த நிலையில் இடிபாடுகளுக்கு இடையே பலர் சிக்கியுள்ளதால் இறப்புகள் உயரும் அபாயம்.
ஆஸ்கார் விருதுக்கான போட்டியிலிருந்து வெளியேறியது லாபட்டா லேடீஸ் திரைப்படம். இறுதிச்சுற்றில் உள்ள 5 படங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.
பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் மேலும் 8 ரன்களை மட்டுமே சேர்த்து 260 ரன்னுக்கு ஆல் அவுட் 185 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில் பலத்த இடி மின்னல் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தம்.