அம்பானி, அதானி
அம்பானி, அதானிட்விட்டர்

100 பில்லியன் டாலர் சொத்துப் பட்டியல்| வெளியேறிய அதானி, அம்பானி! பின்னடைவுக்கு இதுதான் காரணமா?

முகேஷ் அம்பானியும் கவுதம் அதானியும் 100 பில்லியன் டாலர்கள், அதாவது எட்டரை லட்சம் கோடி ரூபாய் சொத்து கொண்டவர்கள் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளனர்.
Published on

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களான முகேஷ் அம்பானிக்கும் அதானிக்கும் 2024ஆம் ஆண்டு ஒரு பின்னடைவான ஆண்டாகவே அமைந்துவிட்டது. ப்ளூம்பெர்க் (BLOOMBERG) நிறுவனம் வெளியிட்டுள்ள 100 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து இருவரும் வெளியேறியுள்ளனர்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 5 மாதங்களில் 120.8 பில்லியன் டாலரில் இருந்து 96.7 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகப் பிரிவும் எரிசக்தி பிரிவும் மிகவும் மோசமாக செயல்பட்டதே இப்பின்னடைவுக்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸின் கடன் அதிகரிப்பும் அந்நிறுவன பங்கு மதிப்பு சரியக் காரணமாக அமைந்தது.

கவுதம் அதானி!

மறுபுறம் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 6 மாதங்களில் 122.3 பில்லியன் டாலரில் இருந்து 82.1 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. பங்கு விலைகளைச் செயற்கையாக அதிகரித்து காட்டியதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டும் முறைகேடாக முதலீடு திரட்டிய புகாரில் அமெரிக்காவில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் அதானியின் சொத்து மதிப்பு சரியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் எலான் மஸ்க் செயல்படுத்த உள்ள ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையதள சேவையும் அம்பானிக்கு அடுத்தாண்டு சவாலாக அமையக்கூடும் என ப்ளூம்பெர்க் கூறியுள்ளது.

அம்பானி, அதானி
இந்திய பணக்காரர் பட்டியல்| முதல் இடத்துக்கு முன்னேறிய கவுதம் அதானி! 2ம் இடத்தில் அம்பானி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com