கொடைக்கானல் போறீங்களா? இ-பாஸ் பெற என்ன செய்ய வேண்டும்? இதோ விவரம்...

கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான இணைய முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல்
கொடைக்கானல்pt web

நேற்று முதல் தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், அனைத்து பகுதிகளிலும் மக்கள் வெயிலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் உள்பகுதிகளில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸூம், வட உள்மாவட்டங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதிலே சற்று ஆறுதலாக தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனாலும் மக்கள் கொடைக்கானல், நீலகிரி உள்ளிட்ட குளிர் பிரதேசங்களில் குவிகின்றனர்.

கொடைக்கானல்
Heat Stroke என்பது என்ன? ஏற்படுவதற்கான காரணம் என்ன? யாருக்கெல்லாம் ஏற்பட வாய்ப்புள்ளது?

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வருகை தரும் அனைத்து வாகனங்களும் வெள்ளிநீர்வீழ்ச்சி அருகில் உள்ள சுங்கச்சாவடியில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பின்னரே கொடைக்கானலுக்குள் செல்ல 07.05.2024 முதல் 30.06.2024 வரை அனுமதிக்கப்படுவர்.

சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்கள் மொபைல் செயலி மூலம் இந்த கியூ ஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்து அந்த சுற்றுலா பயணிகளின் பயண விவரங்களை தெரிந்துகொள்வதோடு, இந்த நடைமுறையினை கண்காணிக்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொடைக்கானல்
கொடைக்கானல் செல்ல மே 7 முதல் இ-பாஸ்.. மக்கள் கருத்து என்ன?

இ பாஸ் தொடர்பான துரித நடவடிக்கைக்கு வெள்ளிநீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகில் நகராட்சி அலுவலர்கள், காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்துத் துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு 07.05.2024 முதல் 30.06.2024 வரை வருகை புரியும் அனைத்து வாகனங்களுக்கும் "epass.tnega.org" என்ற இணைய முகவரி மூலம் 06.05.2024 காலை முதல் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com