தலைப்புச் செய்திகள் | நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்த ISRO முதல் PBKS சுழலில் சிக்கிய CSK வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது பயங்கரவாதிகளுக்கு அவரவர் மண்ணிலேயே சமாதி என பிரதமர் மோடி பரப்புரை செய்தது முதல் பரப்புரை செய்ய 48 மணி நேரம் தடை வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
நிலவில் நீர் முதல் சிஎஸ்கே தோல்வி வரை
நிலவில் நீர் முதல் சிஎஸ்கே தோல்வி வரைபுதிய தலைமுறை

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

 • புதிய இந்தியாவில் பயங்கரவாதிகளுக்கு அவரவர் மண்ணிலேயே சமாதி கட்டப்படுவதாகவும், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் கூட காங்கிரஸ் போட்டியிடவில்லை எனவும் மோடி விமர்சனம்.

 • உத்தரப்பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார்? என்று காங்கிரஸ் கட்சித் தலைமை இன்று அறிவிக்க இருக்கிறது.

நிலவில் நீர் முதல் சிஎஸ்கே தோல்வி வரை
127 வருட சாம்ராஜ்ஜியம்.. 2 ஆக உடைந்த godrej நிறுவனம்.. பிரிக்கப்பட்ட பங்குகள்!
 • விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் குவாரியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், மற்றொரு உரிமையாளரை தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது.

 • வெடிவிபத்து ஏற்பட்ட கல்குவாரி அருகே உள்ள 40க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்ட நிலையில், உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தல்.

விருதுநகர் கல்குவாரி வெடிவிபத்து
விருதுநகர் கல்குவாரி வெடிவிபத்துபுதிய தலைமுறை
 • மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் ஜானகிராமன் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியதாக ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தில் தகவல்.

 • தமிழ்நாட்டில் 20 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவான வெப்பம். அதிகபட்சமாக கரூர் பரமத்தி மற்றும் வேலூரில் 111 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

கோடை வெயில்
கோடை வெயில் முகநூல்
 • கோடை வெயிலுக்கு மத்தியில் ஈரோடு தாளவாடி அருகே பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. ஆனால் இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நிலவில் நீர் முதல் சிஎஸ்கே தோல்வி வரை
Heat Stroke என்பது என்ன? ஏற்படுவதற்கான காரணம் என்ன? யாருக்கெல்லாம் ஏற்பட வாய்ப்புள்ளது?
 • விருதுநகரில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நீர்மோர் பந்தல் திறப்புக்கு ஒலிப்பெருக்கி வைக்க அனுமதிக்காதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

 • திருச்சி அருகே குப்பையில் வீசப்பட்ட புதிய ஆதார் அட்டைகள் தபால் மூலம் வீட்டுக்கு வந்து வேர வேண்டியது என்பது தெரியவந்துள்ளது. அவை எப்படி குப்பைக்கு சென்றன என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 • தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மாணவி டயாப்பர் அணிந்து நீட் தேர்வெழுத தேசிய தேர்வு முகமை அனுமதி அளித்த நிலையில், நீட் தேர்வெழுதும் மாணவிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

நிலவில் நீர் முதல் சிஎஸ்கே தோல்வி வரை
127 வருட சாம்ராஜ்ஜியம்.. 2 ஆக உடைந்த godrej நிறுவனம்.. பிரிக்கப்பட்ட பங்குகள்!
 • சென்னையில் பிரபல திரையரங்கில் நடிகர் விஜய்யின் ‘கில்லி’ திரைப்பட போஸ்டர்கள் கிழிக்கப்பட்ட சம்பவத்தில் அஜித் ரசிகர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், காவல்துறை உத்தரவை தொடர்ந்து அஜித் மற்றும் விஜய்யின் பேனர்கள் அகற்றம் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட ரசிகரும், ஜாமீனில் விடுவிக்கப்பட்டபின் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார்.

 • உடல்நலக் குறைவால் காலமானார் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன். இவர் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.வி, இளையராஜா, வித்யாசாகர் போன்றோர் இசையில் பல வெற்றிப்பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 • நிலவின் துருவப்பகுதிகளில் தரைக்கடியில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது இஸ்ரோ. தொடர்ந்து சந்திரனின் தரைப்பகுதியை துளையிட்டு ஆராய முடிவு செய்துள்ளது.

 • காங்கிரஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பரப்புரை செய்ய 48 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

 • அமெரிக்காவின் பல இடங்களில் தொடரும் மாணவர்கள் போராட்டம். இந்நிலையில், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இஸ்ரேல் போருக்கு எதிராக கண்டனங்கள் பதிவு செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நிலவில் நீர் முதல் சிஎஸ்கே தோல்வி வரை
மகன்களை சமாளிக்க பேரனுக்கு சீட்டு; அதேபேரன் வைத்த வேட்டு; சரிகிறதா தேவகவுடாவின் அரசியல் சாம்ராஜ்யம்?
 • பிரான்ஸ், ஸ்பெயின், துருக்கி, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தொழிலாளர்கள் போராட்டம் மேற்கொண்டனர். இந்நிலையில் பெப்பர் ஸ்பிரே, கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை காவல்துறை கலைத்தது.

 • ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் சுழலில் நேற்று சிக்கி தவித்த சென்னை சூப்பர் கிங்ஸ், சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டாவது தோல்வியை சந்தித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com