இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | சூறாவளி தேர்தல் பரப்புரை முதல் இந்திய தூதரகத்தின் எச்சரிக்கை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, சூறாவளி தேர்தல் பரப்புரை முதல் இந்திய தூதரகத்தின் எச்சரிக்கை வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்தி - நிர்மலா சீதாராமன் - அமித்ஷா
மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்தி - நிர்மலா சீதாராமன் - அமித்ஷாபுதிய தலைமுறை
  • தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் அமித் ஷா, ராகுல் காந்தி, நிர்மலா சீதாராமன் சூறாவளி பரப்புரை மேற்கொண்டனர்.

  • கோவை தேர்தல் பொதுக்கூட்டத்தில் நாடு முழுவதும் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என மகளிர், விவசாயிகளுக்கு அடுக்கடுக்கான வாக்குறுதிகளை அளித்துள்ளார் ராகுல் காந்தி.

  • தமிழகம் வளர்ச்சி அடையாததற்கு திமுக, அதிமுக செய்த ஊழல்களே காரணம் என மதுரையில் நடந்த தேர்தல் பரப்புரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம்.

  • யார் ஆளவேண்டும் என்ற தெளிவின்றி மக்களவை தேர்தலை அதிமுக எதிர்கொள்கிறது என கோவை பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்தி
மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்தி
  • திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது என நாமக்கல் தேர்தல் பரப்புரையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டம்.

  • கவுன்சிலராக கூட வெற்றி பெறமுடியாதவர் அதிமுகவை பற்றி பேசுவதா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்.

  • கோவையில் 80 விழுக்காடு வடமாநில தொழிலாளர்கள் குறைக்கப்படுவார்கள் என பாஜகவின் கோவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை வாக்குறுதி.

  • பாரதிய ஜனதாவை விரட்டும் வரை திமுக தொண்டர்களுக்கு தூக்கமில்லை என கோவில்பட்டியில் பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி பேச்சு.

  • தமிழகத்தில் பாஜகவுக்கு சுவர் விளம்பரம் வரையகூட ஆள் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கடும் விமர்சனம்.

  • தமிழகத்தில் 2026ஆம் ஆண்டில் திமுக, அதிமுக இல்லாத கூட்டணியே ஆட்சியமைக்கும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி சேலத்தில் பரப்புரை.

உதயநிதி, அண்ணாமலை, அன்புமணி
உதயநிதி, அண்ணாமலை, அன்புமணிpt web
  • தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை மத்திய பாஜக அரசு கொடுப்பதில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விழுப்புரத்தில் பரப்புரை.

  • பெரம்பலூரில் பாஜக நிர்வாகிகள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் எழுந்தநிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கேரளா ராஜா என்பவர் கைது.

  • சங்கரன்கோவில் அருகே அமைச்சர் உதயநிதியின் வாகனத்திலும், கூடலூரில் பரப்புரைக்காக சென்ற மத்திய அமைச்சர் எல்.முருகன் வாகனத்திலும் சோதனை செய்த பறக்கும் படை.

மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்தி - நிர்மலா சீதாராமன் - அமித்ஷா
சிதம்பரம் | விசிக தலைவர் திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமானவரி சோதனை! சிக்கியது என்ன?
  • திமுக, அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் அமைந்துள்ள ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரத்தில் வருமான வரித்துறை ஆய்வு

  • தமிழகத்தில் இதுவரை 314 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், தங்க நகைகள், ரொக்கமாக மட்டும் 151 கோடியை கைப்பற்றியது தேர்தல் பறக்கும் படை.

  • தமிழகத்தில் மகளிர் உரிமை தொகையை அளிக்க எந்த தடையும் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம். மேலும், பூத் சிலிப் வழங்கும் பணிகள் இன்றே நிறைவடையும் என்றும் நம்பிக்கை.

  • மக்களவை தேர்தலில் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வே முக்கிய பிரச்னைகளாக இருக்கும் என லோக்நிதி-C.S.D.S. அமைப்பு நடத்திய ஆய்வில் கருத்து.

  • தேசத்தின் அணு ஆயுத சக்தியை அழிக்க விரும்புகிறது I.N.D.I.A. கூட்டணி என காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி விமர்சனம்.

  • தமிழக தணிக்கை இயக்குநர் ஜெய்சங்கரின் நடவடிக்கை சரியே என்றும் தமிழ்நாடு அரசு திருப்பி அனுப்பியது குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும் சிஏஜி விளக்கம்.

மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்தி - நிர்மலா சீதாராமன் - அமித்ஷா
இவரை வச்சிக்கிட்டா தோத்திங்க DC.. உலககிரிக்கெட்டை ஆட்டிவைத்த Fraser! LSG-ஐ வீழ்த்திய உலகசாதனை வீரர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com