இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | பிளஸ் டூ பொதுத்தேர்வு முதல் முகேஷ் அம்பானி வீட்டு திருமணம் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, இன்று தொடங்கும் பிளஸ் டூ பொதுத்தேர்வு முதல் முகேஷ் அம்பானி வீட்டு திருமணக் கொண்டாட்டம் வரை பலவற்றை விவரிக்கிறது.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

 • தமிழகத்தில் இன்று தொடங்குகிற பிளஸ் டூ பொதுத்தேர்வில் 7 லட்சத்து 72 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

 • ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து ஆலையைத் திறக்கக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

 • இடஒதுக்கீடு முறை தவறாக பின்பற்றப்பட்டுள்ளதாக கூறி டிஎன்பிஎஸ்சியால் வெளியிடப்பட்ட சிவில் நீதிபதி தேர்வுப் பட்டியலை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

TNPSC
TNPSCFile Photo
 • தோல்வி பயம் காரணமாகவே பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம். மேலும், ஆளுங்கட்சியாக இருக்கத் தெரியாத பாஜக எதிர்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாக இருக்கட்டும் எனவும் ஸ்டாலின் கருத்து.

 • கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு விவசாயிகளுக்கு செய்தது என்றும், மேகதாது விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அதிமுக போராட்டம்.

 • திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் தலா 2 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
மக்களவை தேர்தல் 2024 | 4 கட்சிகளுடன் தொகுதிப்பங்கீட்டை இறுதி செய்தது திமுக!
முதல்வர் ஸ்டாலின், அண்ணா அறிவாலயம்
முதல்வர் ஸ்டாலின், அண்ணா அறிவாலயம்pt web
 • உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் எனவும், திமுக கூட்டணியில் மக்களவைத் தொகுதி மற்றும் மாநிலங்களவை சீட் கேட்டுள்ளதாகவும் மதிமுகவின் பேச்சுவார்த்தைக்குழு அறிவிப்பு.

 • திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறியா? சினிமா படப்பிடிப்புக்கான வெளிநாடு பயணத்தை கமல்ஹாசன் ஒத்திவைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 • திமுக, காங்கிரஸ் இடையே கசப்பு வெளிப்பட்டிருப்பதாக அதிமுகவின் வைகைச்செல்வன் கருத்து. தங்களை நம்பி காங்கிரஸ் வந்தால் நல்ல பதில் கிடைக்கும் என்றும் பேட்டி அளித்துள்ளார்.

 • பிரதமரை வரவேற்கும் விளம்பரத்தில் சீனக்கொடி இடம்பெற்றதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் சிறு தவறு நேர்ந்துவிட்டதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

 • ரவுடிகளிடம் இருந்து மடத்தை மீட்டெடுத்ததாகவும், இதன்மூலம் மடத்தின் பெருமையை காவல்துறை காத்துள்ளதாகவும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தருமபுரம் ஆதீனம் தரப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
ஆபாச வீடியோ இருப்பதாக தருமபுரம் ஆதினத்தை மிரட்டிய விவகாரம்; 4 பேர் கைது..முக்கிய புள்ளிகள் தலைமறைவு
 • பரந்தூர் விமான நிலைய தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கை வெளியீடப்பட்டுள்ளது.மேலும், 2029இல் பணிகளை முடித்து போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 • வண்டலூரில் திமுக நிர்வாகி நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், குற்றவாளிகளை தீவிரமாக தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

 • ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி தகடுகள் நிறுவி 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

 • 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மானிய உதவி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

  அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு 25 ஆயிரத்து 495 கோடியும், தமிழகத்திற்கு 5 ஆயிரத்து 797 கோடி கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ஆயிரம் ரூபாயாக உயரும் என்றும், மக்கள் மீண்டும் விறகு அடுப்பை பயன்படுத்தும் சூழல் வரலாம் என்றும் என மம்தா பானர்ஜி எச்சரிக்கை.

 • நடப்பு நிதியாண்டின் 3ஆம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.4% ஆக அதிகரித்துள்ளது என்றும், இது நாட்டின் வலிமையை காட்டுவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 • உக்ரைன் போரில் ரஷ்யாவின் வாக்னர் படையில் சிக்கியுள்ள 20 இந்தியர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக வெளியுறவுத்துறை விளக்கமளித்துள்ளது.

 • வங்கதேசத்தில் உணவகங்கள் அடங்கிய கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில். 43 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 75 பேருக்கு தீவிர சிகிச்சை அளிப்பட்டு வருகிறது.

 • சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட் கார்கள் மூலம் அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்கள் களவாடப்படுவதாகவும் , இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

 • தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகனின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் இன்று தொடங்குகிறது. இதில் குஜராத்தின் ஜாம் நகரில் பல நாடுகளின் தலைவர்கள், தூதர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் பங்கேற்பு.

 • இங்கிலாந்திற்கு எதிராக 7ஆம் தேதி தொடங்கும் 5ஆவது டெஸ்டிற்கான இந்திய அணியின் போட்டியாளர்கள் அறிவிப்பு. இந்நிலையில், மீண்டும் அணிக்கு திரும்பினார் ஜஸ்பிரித் பும்ரா; தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு இல்லை எனவும் தகவல்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com