காலை தலைப்புச் செய்திகள் | டெல்லியில் தொடரும் விவசாயிகளின் போராட்டம் முதல் தேர்தல் பத்திர ரத்து வரை

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது டெல்லியில் தொடரும் விவசாயிகளின் போராட்டம் முதல் தேர்தல் பத்திரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான விவரங்கள் வரை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்புதிய தலைமுறை
  • வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு, டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நள்ளிரவு ஒரு மணி வரை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் உடன்பாடு ஏற்படவில்லை.

  • “ராணுவத்தினர் போல் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவது ஏற்கத்தக்கது அல்ல. பெரும் முதலாளிகளின் கடன்களையே மோடி தள்ளுபடி செய்துள்ளார்” - ராகுல் காந்தி விமர்சனம்.

  • “அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் நன்கொடை பத்திரம் சட்டவிரோதம். வெளிப்படைத்தன்மை இல்லாத திட்டம்” என கூறி இத்திட்டத்தினை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.

  • தேர்தல் நிதிபத்திரங்கள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மார்ச் 3 ஆம் தேதிக்குள் விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு எஸ்பிஐ வங்கி தரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரம் - மாதிரி
தேர்தல் பத்திரம் - மாதிரி
  • தேர்தல் நேரத்தில் பணப் பயன்பாட்டை குறைக்கவே தேர்தல் பத்திர நடைமுறை கொண்டு வரப்பட்டது என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் விளக்கமளித்துள்ளார்.

  • தேர்தல் பத்திர திட்டத்தால் பாஜக மட்டுமே பலனடைந்ததாக காங்கிரஸ் குற்றச்சாட்டு. மேலும் மோடி அரசின் மிகப்பெரிய ஊழலை உச்சநீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் விமர்சனம்.

  • தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் வரவேற்பு.

  • தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து. தேர்தல் நிதி இல்லாவிட்டால் கட்சிகள் திருவோடா ஏந்த முடியும் என்றும் கேள்வி.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
”கருப்பு பணத்தை ஒழிக்க உதவும்” தேர்தல் பத்திர முறை என்றால் என்ன? அமல்படுத்தியபோது பாஜக கூறியது என்ன?
  • “கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று முதல் கூடுதலாக 120 பேருந்துகள் இயக்கப்படும். மேலும் இரவு 12 மணிக்கு மேல் பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும்” என அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டு பதிவு.

  • தென்காசி பேருந்து நிலையத்தில் இளைஞர் மீது காவல் உதவி ஆய்வாளர் சரமாரியாக தாக்குதல். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி உறுதியளித்துள்ளார்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
தென்காசி: இளைஞரை காலால் உதைத்து காவலர் தாக்கும் வீடியோ வைரல் - நடந்தது குறித்து எஸ்.பி விளக்கம்!
காவலர் இளைஞரைக் தாக்கிய விவகாரம்
காவலர் இளைஞரைக் தாக்கிய விவகாரம்PT WEB
  • மக்களவை தேர்தலில் தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று புதிய தலைமுறை மற்றும் தி ஃபெடரல் இணையதளம் நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்.

  • ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றும் என்று புதிய தலைமுறையின் மெகா கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

  • “தமிழகத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. பாரம்பரியம் கொண்ட தமிழக சட்டமன்றத்தை ஆளுநர் அவமதித்துவிட்டார்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
“சிறுபிள்ளை விளையாட்டுகளை கண்டு பயந்துவிட மாட்டோம்” - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
  • அடிப்படை வசதிகள் கூட இல்லாத நகரமாக சென்னை இருக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.

  • 2011 சட்டப்பேரவை தேர்தலின்போது, தாசில்தாரை தாக்கிய புகார் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உள்ளிட்டோர் மீதான வழக்கில் மதுரை நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

  • பணி நிரந்தரத்துடன் கூடிய பணி நியமன ஆணை வழங்க வலியுறுத்தல். தலைமைச்செயலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற மக்கள் நலப்பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • மேகதாது விவகாரத்தில், வரைவு திட்டத்தை சமர்ப்பித்துள்ள கர்நாடக அரசு. பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்து குறித்து பரிசீலிக்கப்படுவதாக காவிரி மேலாண்மை ஆணையம் கருத்து.

  • தமிழ்நாடு - கர்நாடகா இடையிலான தென்பெண்ணையாறு பிரச்னைக்கு தீர்வு காண உடன்பாட்டு குழுவை அமைத்தது மத்திய அரசு.

  • மணிப்பூரில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தாக்கியதால் குக்கி இன காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளது.

  • டெல்லி சந்தையில் பயங்கர தீவிபத்து. இதன் காரணமாக 7 பேர் உயிரிழப்பு. மேலும் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

  • மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டி என ஃபரூக் அப்துல்லா அறிவிப்பு. தேசிய மாநாட்டு கட்சியின் முடிவால் I.N.D.I.A. கூட்டணிக்கு மேலும் பின்னடைவு.

  • காசாவில் மருத்துவமனை வளாகத்தில் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் நோயாளிகள், மருத்துவர்கள் அச்சத்துடன் வெளியேறினர்.

  • இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 315 ரன்கள் குவிப்பு. ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா சதம் விளாசி அசத்தல்.

  • சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியில் சர்ஃப்ராஸ் கான் அசத்தல். கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டு அழுத தந்தை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com