“சிறுபிள்ளை விளையாட்டுகளை கண்டு பயந்துவிட மாட்டோம்” - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதலளித்துள்ளார்.
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரைட்விட்டர்

தமிழக சட்டப்பேரவையில், கடந்த 12 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால் தனது உரையை தொடங்கிய ஆளுநர் அதனை 2 நிமிடத்திலேயே நிறுத்திக்கொண்டது பெரும் விவாதங்களுக்கு உள்ளானது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்pt web

“தெற்கு வளர்கிறது, வடக்கிற்கும் சேர்த்து வாரி வழங்குகிறது”

இந்நிலையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரை அளித்துள்ளார். இதில் பேசிய அவர் “திராவிட மாடலின் வழித்தடத்தில் நாம் இயங்கி கொண்டிருப்பதால்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை, தடுக்கவும் முடியாது.

ஒரு காலத்தில் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறதென்று நாமே முழங்கினோம். ஆனால் இப்போது தெற்கு வளர்கிறது, வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரிவழங்குகிறது. இது திராவிட இயக்கத்தினால்தான் சாத்தியமானது.

“அரசியல் செய்யும் ஆளுநர்”

2024 - 2025 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவது என்பது மரபு. அமைச்சரவை தயாரித்து தரும் உரையை ஆளுநர் வாசிக்க வேண்டியது அவரின் கடமை. ஆனால் அவரின் நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் செய்யும் விதமாக இருப்பதாக நினைக்கத் தோன்றுகிறது. தொடர்ச்சியாக இம்மாமன்றத்தினை பயன்படுத்தி கொண்டாரோ என்று கருதும் வகையில் நடந்து கொண்டார் ஆளுநர்.

 தேசிய கீதம் புறக்கணிப்பு: ஆளுநர் ரவி
தேசிய கீதம் புறக்கணிப்பு: ஆளுநர் ரவிpt web

ஆளுநரின் இந்த செயல், நூற்றாண்டுகள் பாரம்பரியம் கொண்ட அவையையே அவமானப்படுத்தும் செயல், கோடிக்கணக்கான மக்களை அலட்சியப்படுத்தும் செயல். திராவிட கழகத்தினை பொறுத்தவரை எத்தனையோ தடைக்கற்களை உடைத்து வந்தவர்கள் நாங்கள். பாசிசத்தினை துணிவோடு எதிர்க்கொண்டு நிற்கும் நாங்கள், இது போன்ற சிறுபிள்ளை விளையாட்டு செயல்களை பார்த்து பயந்துவிடமாட்டோம்”

பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
“ஆளுநர் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றார்; ஆனால்....” ராஜ்பவன் விளக்கம்

இதனை தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசின் சாதனைகளை தெரிவித்தார். மேலும், ”நான் முதலமைச்சராக பதவியேற்று 33 மாதங்களாகின்றன. இவை முன்னேற்ற மாதங்கள், சாதனையின் மாதங்கள்” எனக்கூறி சாதனைகளை பட்டியலிட்டார்.

சாதனைகள்:

1) இந்தியாவின் பொருளாதார வளத்திற்கு தமிழ்நாடு 9 விழுக்காடு பங்கினை தருகிறது.

2) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜிடிபி அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.

3) ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி என்பது 7.24 விழுக்காடாக இருக்கும்போது தமிழ்நாட்டின் வளர்ச்சி 8.19 விழுக்காடாக வளர்ந்துள்ளது.

4) இந்தியாவில் பணவீக்கத்தின் மதிப்பு 6.65 விழுக்காடாக இருக்கும் போது தமிழ்நாட்டில் 5.97 விழுக்காடாக குறைந்துள்ளது

5) ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

6) மின்னணு பொருள்களின் ஏற்றுமதியில் முதல் இடம் வகிக்கிறது தமிழ்நாடு.

7) தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14 ஆம் இடத்திற்கு இருந்த தமிழ்நாட்டினை 3 ஆம் இடத்திற்கு உயர்த்தியுள்ளோம்.

8) கல்வியில் இரண்டாம் இடத்திலுள்ளது தமிழ்நாடு

9) புத்தாக்க தொழில்கள் வரிசையில் தமிழ்நாடு முதலிடம்

10) இளைஞர்கள், பெண்கள், மாற்றுதிறனாளிகள், ஒடுக்கப்பட்டோர், விளிம்புநிலை மக்கள் என்று அனைவரும் தங்களது வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கிறது என்று சொல்ல தொடங்கியுள்ளனர்.

11) அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தின் மூலம் கர்ப்ப கிரகத்திலும் சமத்துவம் நுழைந்துள்ளது. இப்படி தமிழ்நாடு அனைத்திலும் வளர்ந்து வருவதை பார்த்து எதிரிகளுக்கு கோபம் வருகிறது. இதுதான் இந்த ஆட்சியின் மாபெரும் சாதனை.”

“தமிழ்நாட்டின் எய்ம்ஸ் சோகக்கதையினை வர்ணிக்க வார்த்தை இல்லை”

மத்திய அரசு குறித்து பேசிய அவர், “இவை அனைத்தும் நிதி நெருக்கடிக்கடியில் செய்யப்பட்ட சாதனைகள். தற்போது மாநில முதலைமைச்சர்களே டெல்லிக்கு வந்து போராடும் அவலநிலையை காணமுடிகிறது. தமிழ்நாடு இரண்டு பெரிய இயற்கை பேரிடரை சந்தித்துள்ளது. அதற்கு கூட ஒன்றிய அரசு நிதி தரவில்லை.

மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்

மேலும் 30.6.2022 முதல் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை ஒன்றிய அரசு நிறுத்தி விட்டது. இதனால் ஆண்டுக்கு 20, 000 கோடி தமிழ்நாட்டுக்கு இழப்பு. மேலும் எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு புதிய சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டின் எய்ம்ஸ் சோகக்கதையினை வர்ணிக்க வார்த்தை இல்லை.

நான் பிரதமரை சந்திக்கும் போதெல்லாம் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான நிதி குறித்து கோரிக்கை வைக்கிறேன். 6 நாட்களுக்கு முன்பாக கடிதம் கூட எழுதியிருக்கிறேன். ஆனால் இதுவரை எதுவும் தரவில்லை. மாநில அரசின் நிதியில் இருந்துதான் செலவு செய்யப்பட்டுள்ளது.

பேரவையில் முதல்வர் உரை
பேரவையில் முதல்வர் உரை
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
விவசாயி சின்னத்தை பறிகொடுக்கும் நா.த.க.? அடுத்து என்ன செய்யப்போகிறது நாம் தமிழர் கட்சி?

மேலும் இப்போதாவது மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சித்தலைவர் பேசுவது ஆறுதல் அளிக்கிறது. இனி ஒன்றிய அரசிடம், நிதியைப் பெற எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் அரசுடன் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்” போன்ற கருத்துக்களை தெரிவித்து தனது உரையை முடித்துக் கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com