”கருப்பு பணத்தை ஒழிக்க உதவும்” தேர்தல் பத்திர முறை என்றால் என்ன? அமல்படுத்தியபோது பாஜக கூறியது என்ன?

தேர்தல் பத்திரம் திட்டம் என்றால் என்ன, அது அமல்படுத்தப்பட்டபோது பாஜக கூறியது என்ன என்பது குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
பாஜக, தேர்தல் பத்திரம்
பாஜக, தேர்தல் பத்திரம்ட்விட்டர்

தேர்தல் பத்திரம் திட்டம் என்றால் என்ன?

தேர்தல் பத்திரங்கள் என்பது, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை வழங்குவதற்கான ஒரு வழிமுறையாகும். இது ஒரு உறுதிமொழிப் பத்திரம் போன்றது. இந்த நிலையிலதான் கடந்த 2017-18ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் சட்டப்பூர்வமாக 29, ஜனவரி 2018 அன்று அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம்.

நன்கொடையாளர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்!

இந்தத் தேர்தல் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. அந்த தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இந்த பத்திரங்களை கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தேர்தல் நிதி வழங்கலாம். மேலும், அந்த கட்சிகள் 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி இதனை நிதியாக மாற்றிக்கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், அந்த தேர்தல் பத்திரத் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்று அந்த திட்டத்தில் கூறப்பட்டது.

பாஜக, தேர்தல் பத்திரம்
”நரேந்திர மோடியின் ஊழல் கொள்கையின் மற்றுமொரு ஆதாரம்” - தேர்தல் பத்திரம் தீர்ப்பு; தலைவர்கள் வரவேற்பு

தேர்தல் பத்திரங்களை வெளியிடுவது எஸ்பிஐ!

இந்த தேர்தல் பத்திரங்களை வெளியிடுவது எஸ்பிஐ வங்கியாகும். இந்தப் பத்திரங்களை, குறிப்பிட்ட 29 கிளைகளில் மட்டுமே வாங்கிக் கொள்ளலாம். இதனை ரூ.1,000, 10,000, 1,00,000, 10,00,000, 1,00,00,000 என்று வாங்கிக்கொள்ள முடியும். பொதுவாக இந்தப் பத்திரங்கள் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் 10 நாட்களுக்குக் கிடைக்கும். இதே பொதுத் தேர்தல் காலத்தில் கூடுதலாக 30 நாட்கள் மத்திய அரசால் அனுமதி வழங்கப்படும்.

எந்தக் கட்சிகள் தேர்தல் பத்திரங்களைப் பெற முடியும்?

இந்த தேர்தல் பத்திரங்களை இந்திய குடிமகனாக இருக்கும் யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். வாடிக்கையாளர்களின் விவரங்களை பூர்த்தி செய்பவர்கள், தங்கள் வங்கிக் கணக்கின் மூலம் நேரடியாக பணம் அனுப்புபவர்கள் இந்த பத்திரங்களை வாங்கிக் கொள்ள முடியும். 1951, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 29 A, பிரிவின்கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் 1% குறைவில்லாத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே இந்த தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக பெற முடியும்.

பாஜக, தேர்தல் பத்திரம்
”தேர்தல் பத்திரம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது” - உச்ச நீதிமன்ற தீர்ப்பின் 15 முக்கிய அம்சங்கள்!

எதிர்க்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டு என்ன?

கார்ப்பரேட் நிறுவனங்களால் வாரி வழங்கப்படும் இந்த நன்கொடையால், மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. நன்கொடையாளரின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படுவதால், அது கறுப்பு பண புழக்கத்தை ஊக்குவிக்கும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இத்திட்டம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுக்க உதவுவதற்கே உருவாக்கப்பட்டது. ஆளும் கட்சி அதிகமான நன்கொடைகள் பெறுவதற்கான திட்டம் இது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகின்றது.

காங்கிரஸ் - பாஜக
காங்கிரஸ் - பாஜக முகநூல்

இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது பாஜக சொன்னது என்ன?

இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, ​​’தேர்தல் களத்தில் புழங்கும் கறுப்புப் பணத்தை ஒழிக்கப்படும்; தேர்தல் நிதி அளிப்பு வெளிப்படையாக்கப்படும்; அனைத்து அரசியல் நன்கொடைகளையும் வங்கிகள் மூலமாகவே அளிக்க வகை செய்யப்படும்; மொத்தத்தில் தேர்தல் பத்திரங்கள் நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கும் முறையை முறைப்படுத்தும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும், நடைமுறையில் அவ்வாறு செய்யப்படவில்லை. பத்திரத்தை வாங்குபவரோ அல்லது பெறுபவரோ யார் என்பதை கண்டுபிடிக்க முடியாது என்பதால் நன்கொடையாளரின் அடையாளம் மறைக்கப்படுகிறது. இந்த முறை ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்த நிலையில்தான் தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.

பாஜக, தேர்தல் பத்திரம்
அன்றே சொன்னார் ராகுல் காந்தி! தேர்தல் பத்திரங்கள் திட்டம் குறித்து வைரலாகும் 2019ம் ஆண்டு பதிவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com