காலை தலைப்புச் செய்திகள் | 3-வது முறை பிரதமராக பதவியேற்ற மோடி முதல் இந்திய அணி வெற்றி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மோடி 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றது முதல் டி20 உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
மோடி - IND vs PAK கிரிக்கெட் போட்டி
மோடி - IND vs PAK கிரிக்கெட் போட்டிபுதிய தலைமுறை
  • டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாட்டின் பிரதமராக நரேந்திர மோடிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனடிப்படையில், 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்று சரித்திரம் படைத்தார் நரேந்திர மோடி.

  • 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனி பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், எல்.முருகன், எஸ். ஜெய்சங்கர் மீண்டும் அமைச்சர்கள் ஆகியுள்ளனர்.

  • பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள குமாரசாமி, சிராக் பஸ்வான் ஆகியோரும், தெலுங்கு தேசம் கட்சியின் ராம்மோகன் நாயுடுவும் அமைச்சராக பதவியேற்றனர்.

  • உத்தரப்பிரதேசத்தில் இருந்து அதிகபட்சமாக 11 பேருக்கும், பீகாரில் இருந்து 8 பேரும், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிராவில் இருந்து தலா 6 பேரும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

  • பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில், அமைச்சர்களுக்கான துறைகளும் இன்று ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி - IND vs PAK கிரிக்கெட் போட்டி
மூன்றாவது முறையாக பிரதமரானார் மோடி.. அமைச்சரவையில் யார் யார்? முன்னாள் முதல்வர்கள் எத்தனைபேர்?
  • மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடிக்கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும், மதச்சார்பற்ற தன்மையை பராமரிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

  • கோடை விடுமுறை முடிந்து நேற்றிரவு சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பிய மக்களால் தென் மாவட்ட ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

  • தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், முதல் வாரத்திற்குள் புத்தகங்கள் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

  • ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலால், பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் பக்தர்கள் 10 பேர் உயிரிழப்பு. இந்நிலையில், இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, அமித் ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

மோடி - IND vs PAK கிரிக்கெட் போட்டி
ஜம்மு காஷ்மீரில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாத தாக்குதல் - 10 பேர் பரிதாப பலி!
  • இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடந்த பரபரப்பான போட்டியில் கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா.

  • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் சாம்பியன் பட்டத்தை வென்றார் ஸ்பெயின் வீரர் அல்காரஸ். ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் வீழ்த்தி அபாரம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com