மூன்றாவது முறையாக பிரதமரானார் மோடி.. அமைச்சரவையில் யார் யார்? முன்னாள் முதல்வர்கள் எத்தனைபேர்?

மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி
மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி
மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி pt web

இந்திய துணைக்கண்டத்தின் பிரதமராக மோடி பதவியேற்றதைத் தொடர்ந்து, ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், ஆகியோரும் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். பியூஷ்கோயல் மீண்டும் அமைச்சரானார். பாஜக தேசியத் தலைவராக இருந்த ஜே.பி. நட்டா, முதல்முறையாக அமைச்சராக பதவியேற்றார்.

முன்னாள் முதலமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், மனோகர் லால் கட்டார், ஜித்தன் ராம் மஞ்சி உள்ளிட்டோரும் பதவியேற்றனர். அவர்களுக்கு பாஜகவினர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

மத்திய அமைச்சராக ஜெ.பி. நட்டா பதவியேற்பு

பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக ஜெ.பி. நட்டா பதவியேற்றார்
மத்திய அமைச்சராக ஜெ.பி. நட்டா பதவியேற்பு பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக ஜெ.பி. நட்டா பதவியேற்றார்

திறந்த வெளியில் பதவியேற்பு ஏன்? 

வடமாநிலங்களில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா இரவில் நடத்தப்பட்டது. 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் மோடியின் பதவியேற்பு விழாவின் போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாக விருந்தினர்கள் கூறியிருந்தனர். அதன் காரணமாகவே, இம்முறை இரவு நேரத்தில் பதவியேற்பு விழா நடத்தப்பட்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பதவியேற்பு விழா நடந்த குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் வெப்பத்தை சமாளிக்கும் வகையில் தண்ணீரைத் தெளிக்க கூடிய ராட்சத மின்விசிறிகள், ஏர்-கூலர்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் விருந்தினர்களுக்காக குளிர்பானங்கள், குடிநீர் உள்ளிட்டவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்றதால், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. பிரதமர் மோடிக்கு முன்னதாக அடல்பிஹாரி வாஜ்பாயின் பதவியேற்பு விழாவும் குடியரசுத் தலைவர் மாளிகை முன் உள்ள திறந்தவெளி பூங்காவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அமைச்சராக பதவியேற்ற குமாரசாமி

மத்திய அமைச்சராக குமாரசாமி பதவியேற்பு

பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக குமாரசாமி பதவியேற்றார்
மத்திய அமைச்சராக குமாரசாமி பதவியேற்பு பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக குமாரசாமி பதவியேற்றார்

கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மதச் சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான குமாரசாமி, பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் லாலன் சிங் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதேபோல், தர்மேந்திர பிரதான், ஜிதன்ராம் மான்ஜி, சர்பானந்த சோனோவால், விரேந்திர குமார், ஜோதிராதித்ய சிந்தியா, கேரள நடிகர் சுரேஷ்கோபி, தெலுங்கு தேசம் சார்பில் ராம்மோகன் நாயுடு, கர்நாடகா மாநிலத்திக் பிரகலாத் ஜோஷி ஆகியோர் பதவியேற்றனர். தமிழ்நாட்டின் சார்பில், முன்னாள் இணையமைச்சரான எல்.முருகன், மீண்டும் மத்திய அமைச்சராக பதவியேற்றார். அமைச்சர்களாக பதவியேற்ற அனைவருக்கும் கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com