இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | திமுக கொண்டாட்டம் முதல் பெண் காவலர் மீதான கங்கனா புகார் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது கனமழை எச்சரிக்கை முதல் நீட் தேர்வு முறைகேடு வரை பல முக்கிய விஷயங்களை விவரிக்கிறது.
தலைப்புச் செய்திகள்
தலைப்புச் செய்திகள்புதிய தலைமுறை
  • சென்னையில் நேற்று இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. மேலும், திருச்சி, மதுரை உள்பட பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

  • தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதும் என்றும், வரும் 12ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

  • டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர். மேலும், குடியரசுத் தலைவரிடம் ஆதரவு எம்பிக்களின் பட்டியலை சமர்ப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

NDA கூட்டணி
NDA கூட்டணிகூகுள்
  • நாளை மறுநாள் பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி. பதவியேற்பு விழாவில் இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  • மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஓபிஎஸ், டிடிவி தினகரன், நடிகர் ரஜினிகாந்த், ராதிகா, சரத்குமார், தேமுதிக தலைவர் பிரேமலதா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தலைப்புச் செய்திகள்
மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராகிறார் மோடி!
  • கருத்துக்கணிப்பு மூலம் பங்கு சந்தையில் 30 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். இந்நிலையில், முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாக பியூஷ் கோயல் விமர்சனம் செய்துள்ளார்.

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து பெற்றனர் திமுக கூட்டணி எம்.பி.க்கள். இதன்காரணமாக அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது.

  • சண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்.பி. கங்கனாவின் கன்னத்தில் அறைந்த பெண் காவலரின் வீடியோவை வெளியிட்டு நடிகை புகார் அளித்துள்ளார். இந்நிலையில், அக்காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைப்புச் செய்திகள்
“விவசாயிகள் ரூ.100-க்கு போராடுறாங்களா?” - கங்கனா அறையப்பட்ட விவகாரத்தில் பெண் காவலர் சொன்ன விளக்கம்!
  • ஒரே மையத்திலிருந்து நீட் தேர்வு எழுதிய 8 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். இந்நிலையில், சர்ச்சை வெடித்ததையடுத்து தேசிய தேர்வு முகமை விளக்கமளித்துள்ளது.

தலைப்புச் செய்திகள்
நீட் தேர்வில் மோசடியா? ஒரே மையத்தில் 8 பேர் முதலிடம்.. 718, 719 மதிப்பெண்கள் எப்படி? எழும் கேள்விகள்
  • டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது அமெரிக்கா அணி. சூப்பர் ஓவர் முறையில் த்ரில் வெற்றியை ருசித்து அசத்தல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com