காலை தலைப்புச் செய்திகள் | ‘5 எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறப்பு’ முதல் ‘ரஞ்சி கோப்பை கிரிக்கெட்’ வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது 5 எய்ம்ஸ் மருத்துவமனைகளின் திறப்பு முதல் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரை நேற்றைய மற்றும் இன்றைய முக்கிய நிகழ்வுகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
  • கடந்த 70 ஆண்டுகளை காட்டிலும் இந்தியா தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது என்று கூறி, 5 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

  • பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலத்தை திறந்து வைத்தார். மேலும் துவாரகா கோயிலில் தரிசனம் செய்தபின் ஆழ்கடலில் வழிபாடு செய்துள்ளார்.

  • மக்களவை தேர்தல் தொகுதிப்பங்கீடு தொடர்பாக திமுகவுடன் விரைவில் நல்ல உடன்பாடு ஏற்படும் என்று இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நம்பிக்கை.

  • தமாகா, புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சியுடன் பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது. 5 மக்களவை தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடத்தை தமாகா கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • வெள்ள நிவாரணம் கேட்டால் ஆணவத்துடன் மத்திய நிதியமைச்சர் பேசுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். மேலும் சாதுர்யம் இருப்பதால்தான் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகவும் பதில் அளித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
  • வெள்ள நிவாரணத்தை கேட்கும் இடத்தில் கேட்காமல் விட்டுவிட்டு தற்போது நிதி வரவில்லை என முதலமைச்சர் கூறுகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

  • காங்கிரசில் பெண்களுக்கான அங்கீகாரம் மறுக்கப்படுவதாக விஜயதரணி விமர்சனம். மேலும் பெண்களுக்கும் தலைமைத்துவம் இருப்பதை உணர்த்தும் கட்சி பாஜக என பேட்டி.

  • பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மறுப்பு. மேலும் கட்சிக்காக உண்மையுடன் பணியாற்றுவேன் என விளக்கம்.

Pandiarajan
ADMK
BJP
Pandiarajan ADMK BJP
  • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ரத்தாகும் அபாயம் உள்ளது என்று திமுக எம்.பி கனிமொழி பேச்சு.

  • மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தாமதமானாலும் அவசியமான தாமதம்தான். ஆகவே விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.

  • விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட தேமுதிகவினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மதுரையில் நடைபெற்ற கட்சி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

VijayaPrabhakaran
DMDK
LokSabhaElection
VijayaPrabhakaran DMDK LokSabhaElection
  • போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் நிலையில் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

  • போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்.

  • ஆந்திர அரசு பாலாற்றில் மீண்டும் தடுப்பணை கட்டவுள்ளது. இது வஞ்சிக்கும் செயல் என தமிழக விவசாயிகள் எதிர்ப்பு.

  • சென்னை பள்ளிக்கரணையில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இக்குற்றத்தில் தொடர்புடைய பெண்ணின் சகோதரர் உட்பட 5 பேரை கைது செய்தது காவல்துறை.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
சென்னை: சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் வெட்டிக் கொலை - பெண்ணின் அண்ணன் உட்பட 5 பேர் கைது
  • சென்னை மெரினாவில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா, கலைஞர் நினைவிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

  • இன்று முதல் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் 5 புறநகர் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு செல்லும் பயணிகளுக்காக சிறப்பு ஏற்பாடு.

  • சட்டமன்ற உறுப்பினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர் ராமேஸ்வரம் மீனவர்கள்.

  • ஈரோட்டில் நடைபெற்ற காங்கேயம் இனகாளைகள் கண்காட்சியில் பங்கேற்ற நாட்டு இன மாடுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.

  • நீலகிரி அருகே பூர்வகுடி மக்களின் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

  • ஹரியானாவில் இந்திய லோக் தள கட்சியின் மாநில தலைவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை செயப்பட்டடார்.மேலும் தப்பியோடிய குற்றவாளிகளை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

  • மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காலிக்கு சென்ற உண்மை கண்டறியும் குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறைக்கு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

  • சீனாவில் பார்வையாளர்களை கவரும் விளக்கு திருவிழாவில் டிராகன், பீனிக்ஸ் பறவை வடிவங்களில் மின்னும் வண்ண விளக்குகள் காணப்பட்டன.

  • ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2ஆவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 145 ரன்களுக்கு ஆல் அவுட். இந்நிலையில் 192 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா, விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் சேர்ப்பு.

  • ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேற்றம். காலிறுதியில் சவுராஷ்ட்ரா அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
ரஞ்சி: 9 விக்கெட்டுகள் வீழ்த்திய சாய் கிஷோர்! சவுராஷ்டிராவை வீழ்த்தி SEMI FINAL சென்ற தமிழ்நாடு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com