ரஞ்சி: 9 விக்கெட்டுகள் வீழ்த்திய சாய் கிஷோர்! சவுராஷ்டிராவை வீழ்த்தி SEMI FINAL சென்ற தமிழ்நாடு!

ரஞ்சிக்கோப்பை காலிறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணியை இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது தமிழ்நாடு அணி.
ரஞ்சிக்கோப்பை காலிறுதி
ரஞ்சிக்கோப்பை காலிறுதிX

2024 ரஞ்சிக்கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி 5ம் தேதி தொடங்கிய 89வது ரஞ்சி சீசன், தற்போது காலிறுதி போட்டிகளை எட்டியுள்ளது. கோப்பைக்காக 38 அணிகள் மோதிய நிலையில், சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு, மும்பை, விதர்பா, கர்நாடகா, பரோடா, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரா ஆகிய 8 அணிகள் காலிறுதிப்போட்டியில் விளையாடுகின்றன.

ரஞ்சிக்கோப்பை காலிறுதி
INDvENG|“வெளிப்படைத்தன்மை தேவை; DRS இயக்குபவர்களை கேமரா கொண்டு கண்காணிக்க வேண்டும்!”- மைக்கேல் வாகன்

9 விக்கெட்டுகள்.. 60 ரன்கள்! ஆல்ரவுண்ட் ஷோ காட்டிய சாய் கிஷோர்!

இதில் முக்கியமான ஒரு போட்டியில் சவுராஷ்டிரா அணியை எதிர்கொண்டு விளையாடியது சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணி. கோயம்புத்தூர் எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த காலிறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.

தமிழ்நாடு
தமிழ்நாடு

முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தமிழ்நாடு அணி, 122 ரன்களுக்கு சவுராஷ்டிரா அணியை ஆல்அவுட் செய்து கலக்கியது. புஜாரா மட்டுமே 170 பந்துகளை சந்தித்து 46 ரன்கள் எடுத்தார். சிறப்பாக பந்துவீசிய கேப்டன் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணி, சாய் கிஷோர் 60 ரன்கள், இந்திரஜித் 80 ரன்கள் மற்றும் பூபதி குமார் 65 ரன்கள் ஆட்டத்தால் 338 ரன்கள் குவித்தது. அதற்கு பிறகு இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய சவுராஷ்டிரா அணியை 183 ரன்களுக்கு சுருட்டி அபாரமான வெற்றியை பதிவுசெய்தது தமிழ்நாடு. இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

முடிவில் நடப்பு சாம்பியனை அசால்ட்டாக தட்டித்தூக்கிய தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் முதல் அணியாக காலடி எடுத்துவைத்தது. பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் கலக்கிய சாய் கிஷோர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரஞ்சிக்கோப்பை காலிறுதி
“மனசுல என்ன ஹீரோ-னு நினைப்பா?” - சர்ஃபராஸ் கானை எச்சரித்த ரோகித் சர்மா! என்ன நடந்தது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com