HEADLINES | 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முதல் ஓய்வை அறிவித்த ரொனால்டோ வரை
புதிய தலைமுறையின் இன்றைய தலைப்புச் செய்தியில், தென்மாவட்டங்களில் நீடிக்கும் கனமழை, அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை தொடர்ந்து நிறுத்தம், டெல்லியில் இன்று கூடும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு, ஓய்வை முடிவை அறிவித்த கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ உள்ளிட்ட பல்வேறு செய்திகளை பார்க்கவிருக்கிறோம்.
நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கணிப்பு.
நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் குளிர்ச்சியான நிலை... கன்னியாகுமரியில் பெய்த மழையால் நீரோடையான சாலை...
உடுமலையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கொட்டிய கனமழை. சாலையில் அதிகளவில் தண்ணீர் தேங்கியதால் சிரமமடைந்த வாகன ஓட்டிகள்.
தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை தொடர்ந்து நிறுத்தம்... தனித்தனி வரி விதிப்பு விவகாரத்தில் சுமூக முடிவு ஏற்படும் வரை பேருந்துகளை இயக்க முடியாது என உரிமையாளர்கள் திட்டவட்டம்...
டெல்லி கார் வெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்... சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணையை தீவிரப்படுத்திய என்ஐஏ அதிகாரிகள்...
டெல்லி கார்வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் முகமது உமர் குறித்து தீவிர விசாரணை... இதுவரை 5 பேரை கைது செய்து விசாரித்து வரும் புலனாய்வு அமைப்புகள்...
டெல்லியில் கூடுகிறது பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு.... நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து பிரதமர் தலைமையில் இன்று மாலை ஆலோசனை...
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு பின்னால் இருப்பவர்களை கண்டறிந்து வேட்டையாட வேண்டும்... டெல்லியில் நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தல்...
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு உளவுத் துறையின் தோல்வியே காரணம்... உள்துறை அமைச்சர் பதவிக்கு அமித் ஷா தகுதியற்றவர் என கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் பிரியங்க் கார்கே விமர்சனம்...
எஸ்ஐஆருக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் ஆணை... உயர் நீதிமன்றங்கள் விசாரிக்கக் கூடாது என்றும் உத்தரவு...
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு ஆதரவாக அதிமுக தரப்பில் தாக்கல் செய்த மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு... இடையீட்டு மனுவை திரும்ப பெற்றுவிட்டு, ரிட் மனுவாக தாக்கல் செய்யவும் அறிவுறுத்தல்...
எஸ்ஐஆரை தடுப்பதே இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை... தொடர்ந்து செயலாற்றுவோம்; மக்களின் வாக்குரிமையை பாதுகாப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு...
ராஜபாளையம் அருகே கோயிலில் நடந்த இரட்டை கொலை சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்... கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக குற்றச்சாட்டு...
மாம்பழ சின்னம் கோரி தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்... டார்ச் லைட், விசில் உள்ளிட்ட 3 சின்னங்களில் ஒன்றை தருமாறு ஆணையத்தை நாடியது மக்கள் நீதி மய்யம்,...
அரசியல் கட்சி கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் வகையில் புதிய வழிமுறைகளை வகுக்க கூடுதல் அவகாசம்... நவம்பர் 20ஆம் தேதி வரைவு வழிகாட்டு வழிமுறைகளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு...
தமிழகத்திற்கு நிதி வருவதில்லை என்ற பொய் பரப்புரையை தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்... மாநிலங்களுக்கு இடையே மத்திய பாஜக அரசு பாகுபாடு பார்ப்பதில்லை என்றும் பேச்சு...
திருப்புவனம் அருகே போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு... ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...
தமிழக மக்களின் பணத்தை, பாஜக அரசு பிக்பாக்கெட் அடிப்பதாக அமைச்சர் பெரிய கருப்பன் குற்றச்சாட்டு... பாரபட்சம் பார்ப்பது, பொய் கூறுவது யார்? என்றும் கேள்வி...
சிவகாசி சாட்சியாபுரத்தில் புதிய ரயில்வே பாலம் திறக்கப்பட்டதை பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்... இரவில் மின்விளக்குகளால் ஜொலித்த பாலத்தின் பருந்து பார்வை காட்சிகள்...
பிஹாரில் இரண்டாம் கட்டத் தேர்தலில் 68 புள்ளி 76 விழுக்காடு வாக்குகள் பதிவு... இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில் மொத்தம் 66 புள்ளி 91 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல்...
பிஹார் சட்டமன்றத் தேர்தலில் மகுடம் சூடப் போவது யார்?... 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் மும்முரம்...
பிஹாரில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியீடு... பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் என பெரும்பான்மையான முடிவுகளில் தகவல்...
அரசுமுறைப் பயணமாக ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவுக்கு சென்றார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு... பாரம்பரிய நடனத்துடன் உற்சாக வரவேற்பு...
பாகிஸ்தானில், தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் பலியான சம்பவத்தில் இந்தியாவின் சதி இருப்பதாக பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் குற்றச்சாட்டு... இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கதை கட்டுவதாக மத்திய வெளியுறவுத் துறை பதிலடி....
வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு அதிபர் ட்ரம்ப் ஆதரவு... உள்நாட்டு மாணவர்களை விட அதிக கட்டணம் செலுத்துவதால் அமெரிக்காவுக்கு நல்ல வணிகம் இருப்பதாக பேச்சு...
ஓய்வு முடிவை அறிவித்தார் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ... 2026 உலகக்கோப்பை தொடர்தான் தனது கடைசி major tournament ஆக இருக்கும் என பேச்சு...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 760 ரூபாய் உயர்வு.... கிராமுக்கு 220 ரூபாய் விலை உயர்ந்து 11 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை...
சென்னையில் வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்தது... ஒரு கிராம் வெள்ளி 170 ரூபாய்க்கு விற்பனை...

