HEADLINES | இன்று பதவியேற்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் முதல் பாமகவில் உச்சக்கட்ட குழப்பம் வரை!
குடியரசு துணைத் தலைவராக இன்று பதவி ஏற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்டுக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதி உதவியை அறிவித்தார் பிரதமர் மோடி மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் எனவும் உறுதி..\
வாக்கு திருட்டு தொடர்பாக விரைவில் ஹைட்ரஜன் குண்டு வெடிக்கும். பாஜகவுக்கு ராகுல் காந்தி மீண்டும்எச்சரிக்கை.
எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. கிருஷ்ணகிரியில் டெல்டா நிறுவனத்தின் புதிய ஆலையை திறந்துவைத்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..
பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்துஅன்புமணியை நீக்கினார் ராமதாஸ்..பாமகவில் நிலவும் உச்சக்கட்டகுழப்பத்தால் தொண்டர்கள் அதிர்ச்சி..
தேவைப்பட்டால் அன்புமணி புதிய கட்சியை தொடங்கட்டும் என ராமதாஸ் யோசனை..உயிருடன் உள்ளவரை மக்களுக்காக உழைப்பேன் எனவும் உறுதி..
பாட்டாளி மக்கள் கட்சி விதிகளின்படி அனைத்து அதிகாரமும் அன்புமணியிடமே உள்ளது... ராமதாஸின் எந்த உத்தரவும் பாமகவை கட்டுப்படுத்தாது என்றும் வழக்கறிஞர் பாலு திட்டவட்டம்...
அன்புமணியை நீக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு உண்டு. பாமக பொதுச் செயலர் முரளி சங்கர் திட்டவட்டம்...
பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிரச்சினைக்கு பாஜகவே காரணம்... பாஜகதான் அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தி செங்கோட்டையனையும் பிரித்தது என செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு...
திமுக அரசால் தேமுதிக பரப்புரைக்குநிறைய இடையூறுகள்...மின்கம்பங்களின் விளக்கை திடீரெனஅணைத்து விடுகிறார்கள் எனபிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு...
திருச்சியை தொடர்ந்து பெரம்பலூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல்துறை அனுமதி... அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விஜய் பேச வேண்டும், சாலைவலம் செல்லக் கூடாது உள்ளிட்ட 21 நிபந்தனைகள் விதிப்பு...
கடலூர், உளுந்தூர்பேட்டை, அருப்புக்கோட்டை, சிதம்பரம், முசிறிஎன தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை... கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்....
டெல்லியில் தொடர் கனமழையால் தொற்று நோய் பரவல் அதிகரிப்பு... மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் உயர்வு...
அதிகரிக்கும் டெங்கு, மலேரியா காய்ச்சலை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்... மாநில முதல்வர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா அறிவுறுத்தல்...
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர்நடத்திய தேடுதல் வேட்டையில் 10 நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொலை....நக்ஸலைட்டுகளிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்...
2026 மார்ச் மாதத்திற்குள் சிவப்பு பயங்கரவாதம் ஒழிக்கப்படுவது உறுதி. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாதிட்டவட்டம்...
ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்களை சேர்க்க வேண்டாம் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வலியுறுத்தல்...ஏற்கெனவே பணியாற்றும் இந்தியர்களை விடுவிக்கவும் கோரிக்கை...
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் வர்த்தக பிரச்சினைகள் தீர்க்கப்படும்... அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் லுட்னிக் திட்டவட்டம்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் லீக் ஆட்டத்தில், ஹாங்காங் அணியை வீழ்த்தியது வங்கதேசம்... 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி...
பிசிசிஐயின் தலைவர் பதவிக்கு சச்சின் டெண்டுல்கர் போட்டியிடுவதாக வெளியான தகவல்... முற்றிலும் வதந்தி என சச்சின் தரப்புவிளக்கம்...
கூலி படம் ஓடிடி தளத்தில் வெளியானநிலையில், மோனிகா பாடலுக்கானவீடியோ வெர்சனும் யூடியூப்பில்வெளியானது...துள்ளல் போட வைக்கும் பாடலைஅதிகம் பகிரும் ரசிகர்கள்...