தலைப்புச் செய்திகள் : ஒரே இரவில் 33 ராமேஸ்வர மீனவர்கள் கைது முதல் இந்தியா பெற்ற த்ரில் வெற்றி வரை
ஒரே இரவில் ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேரை கைது இலங்கை கடற்படை செய்துள்ளது. எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
76ஆவது குடியரசு தின கொண்டாட்டத்துக்கு தலைநகர் டெல்லி தயாரானது. கடமைப் பாதையில் தேசியக்கொடி ஏற்றுகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் தேசியக்கொடி ஏற்றவுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.. தமிழ்நாடு முழுவதும் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்...
76ஆவது குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களிடையே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்... ‘ஒரு நாடு ஒரே தேர்தல்’, அரசு நிர்வாகத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் என உறுதி தெரிவித்துள்ளார்...
குடியரசு தினத்தையொட்டி மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது... 119 பேருக்கு பத்ம ஸ்ரீ, 19 பேருக்கு பத்ம பூஷண், 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைப் பிரிவில் நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் நன்றி தெரிவித்தார் அஜித்குமார்...
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது... பிரபல நடிகையும் பரதநாட்டியக் கலைஞருமான சோபனாவுக்கும் பத்ம பூஷண் விருது அறிவித்து கவுரவம்...
கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செஃப் தாமோதரன், பறையிசை கலைஞர் வேலு ஆசான் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விருதுகள் பெறும் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அசாதாரண சாதனைகளை கவுரவிப்பதிலும், கொண்டாடுவதிலும் இந்தியா பெருமிதம் கொள்வதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்...
பத்ம விருதுகளுக்கு தேர்வான தமிழகத்தை சேர்ந்தோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பத்ம பூஷண் விருது பெறவுள்ள நடிகர் அஜித்குமாருக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்து மழை...
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து அறிவிப்பு எதிரொலி... பாராட்டு விழாவில் பங்கேற்க இன்று அரிட்டாபட்டி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
எடப்பாடி பழனிசாமியின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், அமைச்சர்களை வைத்து வெற்று அறிக்கை வெளியிடுகிறார்... முதலமைச்சர் ஸ்டாலின் மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்...
ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் "இது பெரியார் மண் அல்ல" என்று மீண்டும் சர்ச்சைப் பேச்சு...
பெரியாரை நன்றி கெட்ட தனமாக கொச்சைப்படுத்துவது நாகரிகம் அல்ல என பெரியாரை விமர்சித்து வரும் சீமானுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்...
புதிய ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெறும் அரசு ஊழியர்கள், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயமில்லை என்றும் விரும்பினால் மட்டும் தேர்வு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவிப்பு...
உலகின் மிக உயரமான ரயில் பாலத்தில் இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்... காஷ்மீரில் புதிதாக கட்டப்பட்டுள்ள செனாப் பாலத்தில் சோதனை ஓட்டம்...
ஹமாஸ் அமைப்பினரால் 2ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பிணைக் கைதிகள்... கண்ணீர் மல்க ஆரத்தழுவி உறவுகளை வரவேற்ற குடும்பத்தினர்..
சேப்பாக்கத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.... ஒற்றை ஆளாக போராடி வெற்றியை தேடித்தந்த திலக் வர்மா...
நடப்பாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமை வெல்லப்போவது யார்?... ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் சின்னர் - ஸ்வரெவ் இன்று பலப்பரீட்சை....