இரவு வரை காத்திருக்க வேண்டியதில்லை.. காலையிலேயே வருகிறது 'தளபதி 69' ஃபர்ஸ்ட் லுக்! புதிய அப்டேட்!
சினிமாவிலிருந்து விலகி முழுநேர அரசியலில் களமிறங்கியிருக்கும் நடிகர் விஜய், தன்னுடைய சினிமா கரியரின் கடைசி திரைப்படமாக ’தளபதி 69’ படத்தில் நடித்துவருகிறார்.
ஹெச் வினோத் இயக்கம் நடிகர் விஜயின் 69வது படத்தில் அனிமல் பட வில்லனான பாபி தியோல், பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்த பூஜா ஹெக்டே, பிரேமலு புகழ் பட நடிகை மமிதா பைஜு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் சேர்ந்து நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷ்ன் தயாரிக்கிறது.
தளபதி 69 ஒரு கமர்சியல் படமாகவும், அதேநேரத்தில் அரசியல் பேசும் திரைப்படமாகவும் இருக்கும் என்று இயக்குநர் ஹெச்.வினோத் கூறியிருந்த நிலையில், படம் கிட்டத்தட்ட 70% முடிந்துவிட்டதாக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாளை காலையிலேயே காத்திருக்கும் சர்ப்ரைஸ்..
விஜய் முழுமையாக அரசியலில் இறங்கியிருக்கும் நிலையில் அவருடைய கடைசி படத்தில் தலைப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. படத்தின் அறிவிப்பே ஜனநாயத்தின் ஒளியை ஏந்திச்செல்லும் நபர் (The torch bearer of Democracy) என்ற டேக் லைன் பயன்படுத்தப்பட்ட நிலையில், தளபதி 69 படத்தின் பெயரானது ’நாளைய தீர்ப்பு அல்லது ஜனநாயகம்’ என இருக்கும் என சமூகவலைதளங்களில் பேசப்பட்டுவருகிறது.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜனவரி 26 அன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அப்டேட் வெளியாகும் நேரத்தையும் உறுதிசெய்துள்ளது.
அதன்படி தற்போது வெளியாகியிருக்கும் அறிவிப்பில் “நீங்கள் 11.11.. என இரவு வரை காத்திருக்க வேண்டியதில்லை, நாளை காலை 11 மணிக்கே ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும்” என கூறப்பட்டுள்ளது.