HEADLINES| அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் முதல் ஐபிஎல் லக்னோ கேப்டனாக ரிஷப் பண்ட் வரை
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் டொனால்டு டிரம்ப்... துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் பதவியேற்பு...
அமெரிக்கர்களின் நலனுக்காக வெளிநாடுகள் மீது மேலும் கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் அதிரடி... தென் எல்லைகளில் அவசர நிலை பிரகடனம் செய்வதாகவும் அறிவிப்பு...
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும் என்றும் அதிபர் டிரம்ப் பேச்சு... ஆண், பெண் என்ற இரு பாலினத்திற்கே அங்கீகாரம் என்றும் திட்டவட்டம்...
சீனா நிர்வகித்து வரும் பனாமா கால்வாயை மீட்டெடுப்பேன் என்று டிரம்ப் உறுதி... மெக்சிகோ வளைகுடா, இனி அமெரிக்கா வளைகுடாவாக அழைக்கப்படும் என்றும் அறிவிப்பு...
உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை கட்டமைக்க மீண்டும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்... அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு...
நடிகர் எஸ்வி சேகரின் நாடகப்பிரியா குழுவின் 50ஆவது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு... தான் இருக்கும் கட்சியில் இருப்பவர்களையே விமர்சனம் செய்யும் துணிச்சல் கொண்டவர் எஸ்.வி.சேகர் என்று பேச்சு...
நம்பும் வகையில் நாடகம் ஆடுவதில் திமுக கில்லாடி என விஜய் விமர்சனம்... அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் போன்று, பரந்தூர் திட்டத்தை ஏன் எதிர்க்கவில்லை என்று கேள்வி...
பாட்னாவில் நடைபெற்ற சட்டப்பேரவை சபாநாயகர்கள் மாநாட்டில் இருந்து தமிழக சபாநாயகர் அப்பாவு வெளிநடப்பு... தமிழக ஆளுநர் குறித்து பேசும்போது மாநிலங்களவை துணை தலைவர் குறுக்கிட்டதாக புகார்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டி... இறுதி நேரத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த பெண் வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர் பட்டியல் வெளியானது...
3 கிலோ தங்க நகைகளை அணிந்து வந்த ஆந்திர தொழிலதிபர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் வியப்பு...
மங்களூருவில் வங்கியில் இருந்து 12 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கொள்ளையடித்த வழக்கு... தமிழகத்தைச் சேர்ந்த 3 மூன்று பேரை கைது செய்தது காவல்துறை...
தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம்...
விறுவிறுப்பை எட்டியுள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்... காலிறுதிக்கு முன்னணி வீரர், வீராங்கனைகள் தகுதி...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணி கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்... அணி உரிமையாளர்களின் நம்பிக்கையை காப்பேன் என பேட்டி...