தலைப்புச் செய்திகள் | மீண்டும் தகர்ந்த RCB-ன் கனவு முதல் மஞ்ஞுமல் பாய்ஸ்க்கு செக் வைத்த இளையராஜா வரை

இன்றைய காலை தலைப்புச் செய்திகள் மீண்டும் தகர்ந்த RCB-ன் ஐபிஎல் கோப்பை கனவு, ‘நான் மனிதப்பிறவி அல்ல’ என்ற பிரதமரின் பேச்சு, மஞ்ஞுமல் பாய்ஸ்க்கு செக் வைத்த இளையராஜா வரை பல முக்கிய நிகழ்வுகளை விவரிக்கிறது.
தலைப்புச் செய்திகள்ஊ
தலைப்புச் செய்திகள்ஊபுதிய தலைமுறை
  • தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

  • மக்களவை 6ஆம் கட்டத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. இதையடுத்து 58 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு தீவிரமடைந்துள்ளது.

  • “என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மா தான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்” என ⁠தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.

  • குடும்பமே முதன்மை என்பது I.N.D.I.A. கூட்டணியின் கொள்கை என பிரதமர் மோடி விமர்சனம். தேசமே முதன்மை என்பதே பாஜகவின் கொள்கை என்றும் டெல்லியில் பரப்புரை

  • கீழ்த்தட்டு மக்களுக்கு எதிராக அரசின் கட்டமைப்பு உள்ளது என்று ஹரியானா பரப்புரை கூட்டத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

ராகுல் காந்தி - நரேந்திர மோடி
ராகுல் காந்தி - நரேந்திர மோடிFile image
  • வேங்கைவயல் வழக்கில் 2ஆவது முறையாக விசாரணைக்கு ஆஜராகுமாறு காவலர் ஒருவருக்கு சிபிசிஐடி சம்மன். வழக்கு இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாகவும் அதிகாரிகள் தகவல்.

  • புனேவில் மதுபோதையில் அதிவேகமாக காரை இயக்கி, விபத்து ஏற்படுத்திய சிறுவனின் ஜாமீன் ரத்து. கண்காணிப்பு முகாமில் சிறுவனை அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவு.

  • மஞ்ஞுமல் பாய்ஸ் படக்குழுவுக்கு இளையராஜா தரப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அனுமதியின்றி குணா படப் பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தல்.

தலைப்புச் செய்திகள்ஊ
அமெரிக்க டாலருக்கு ஆப்பு.. மாலத்தீவுக்கு அடித்த ஜாக்பாட்.. ஒரேநேரத்தில் OK சொன்ன இந்தியா, சீனா!
  • ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குவாலிஃபயர் போட்டிக்கு முன்னேறியது ராஜஸ்தான் அணி. இந்தமுறையும் பெங்களூருவின் கோப்பை கனவு தகர்ந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம்.

  • தமிழகத்தில் ஈரோடு, விருத்தாசலம் பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கோபிசெட்டிப்பாளையம் அருகே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டனர்.

  • தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கல்லாற்றை கடக்க முயன்று வெள்ளத்தில் சிக்கிய நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்கள் வெள்ளத்தில் சிக்கி கதறும் பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

  • கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்திய யூ ட்யூபர் இர்ஃபான் தனது செயலுக்கு நேரில் சென்று மன்னிப்பு கோரியுள்ளார்.

தலைப்புச் செய்திகள்ஊ
சிசுவின் பாலினத்தை அறிவித்த விவகாரம் - சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!
  • ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்றார்.

  • மேற்கு வங்கத்தில் 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. உண்மையான ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் பயனடையவில்லை எனக்கூறி கொல்கத்தா நீதிமன்றம் நடவடிக்கை.

  • பொது இடங்களில் கழிவுகளை கொட்டினால் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. முக்கிய இடங்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும் என்றும் எச்சரிக்கை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com