சிசுவின் பாலினத்தை அறிவித்த விவகாரம் - சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!

யூடியூபர் இர்ஃபான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளியிட்டது சர்ச்சையான நிலையில், தனது வலைதளப்பக்கத்திலிருந்து அந்த கானொளியை நீக்கியதுடன், சுகாதாரத்துறையிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.
யூட்யூபர் இர்ஃபான் - குழந்தை பாலினம் கண்டறிதல்
யூட்யூபர் இர்ஃபான் - குழந்தை பாலினம் கண்டறிதல்புதிய தலைமுறை

யூடியூபர் இர்ஃபான் தனது மனைவியுடன் இணைந்து, கருவினில் இருக்கும் தங்கள் குழந்தையின் பாலினம் என்ன என்பதை தனது யூடியூப் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டார். கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று அறிவிப்பது இந்திய சட்டபடி குற்றம் என்பதால், இர்ஃபானின் வீடியோ சர்ச்சையில் சிக்கியது.

இதையடுத்து இர்ஃபான் தன் சமூக வலைதள பக்கங்களில் இருந்து வீடியோவை நீக்கினார். இருப்பினும் இது குறித்து சுகாதாரத்துறை அவரிடம் விளக்கம் கேட்டதுடன், யூடியூப் பக்கத்தில் உள்ள காணொளியை நீக்குமாறு அறிவுறுத்தி இருந்தது.

யூட்யூபர் இர்ஃபான் - குழந்தை பாலினம் கண்டறிதல்
சர்ச்சையை ஏற்படுத்திய Youtuber இர்ஃபானின் பதிவு; மருத்துவரின் கருத்து என்ன?

இதில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனர் இர்ஃபானுக்கு நேற்று நோட்டீஸ் வழங்கிய நிலையில் இர்ஃபான் நேரில் சென்று சுகாதாரத்துறை இயக்குனரிடம் இன்று மன்னிப்பு கோரினார்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனரை நேரில் சந்தித்து, தான் செய்த தவறுக்கு கடிதம் எழுதி மன்னிப்பு கோரினார் இர்ஃபான்.

மனைவியுடன் யூட்யூபர் இர்ஃபான்
மனைவியுடன் யூட்யூபர் இர்ஃபான் ட்விட்டர்
மன்னிப்பு கடிதத்தை ஏற்றுக்கொண்ட சுகாதாரத் துறை இயக்குனர் மற்றும் அதிகாரிகள், 4 மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்ட இர்ஃபான், சிசுக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு காணொளியை வெளியிட வேண்டுமென நிபந்தனை தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சிசுக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் வீடியோ வெளியிடுவதாக இர்ஃபான் உறுதி அளித்துள்ளார்.

முன்னதாக இன்று மதியம் இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் குழு நுங்கம்பாக்கத்தில் உள்ள இர்ஃபானின் அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஏற்கனவே தான் அந்த வீடியோவை நீக்கிவிட்டதாகவும், தான் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோருவதாகவும் இர்ஃபான் குறிப்பிட்டிருந்தார்.

யூட்யூபர் இர்ஃபான் - குழந்தை பாலினம் கண்டறிதல்
யூட்யூபர் இர்ஃபான் செய்தது ஏன் தவறு? பாலினம் கண்டறிதல் & அறிவித்தல் ஏன் இந்தியாவில் கடும் குற்றம்?

இதையடுத்து இர்ஃபான் விவகாரத்திற்கு விரைவில் சுகாதாரத்துறை முற்றுப்புள்ளி வைக்க உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com