கச்சத்தீவு, ரஞ்சி கோப்பை
கச்சத்தீவு, ரஞ்சி கோப்பைpt web

தலைப்புச் செய்திகள்: மீண்டும் கச்சத்தீவு விவகாரம் முதல் ரஞ்சி கோப்பையில் விதர்பா சாம்பியன் வரை

தலைப்புச் செய்தியில் மீண்டும் அரசியல் களத்தில் கச்சத்தீவு விவகாரம் முதல் ரஞ்சி கோப்பையில் விதர்பா அணி சாம்பியன் ஆனது வரை பார்க்கலாம்.
Published on

மீனவர்களின் பிரச்சினைக்கு 1974ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தம் தான் காரணம்.... மத்தியில் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தவர்கள் மாபெரும் பாவத்தை இழைத்துவிட்டதாக காங்கிரஸ், திமுக மீது ஆளுநர் ரவி மறைமுக விமர்சனம்...

தமிழ்நாட்டில் அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார்; அவருடன் ஆளுநர் போட்டியிட வேண்டாம்... கச்சத்தீவு இலங்கையிடம் செல்ல திமுகவும் காரணம் என ஆளுநர் கூறிய நிலையில் அமைச்சர் ரகுபதி அறிக்கை...

ரகுபதி, ஆளுநர் ஆர்.என்.ரவி
ரகுபதி, ஆளுநர் ஆர்.என்.ரவிpt web

கச்சத்தீவு விவகாரத்தில் உண்மைக்கு புறம்பாக ஆளுநர் கருத்துக்கூறி வருவதாக செல்வப்பெருந்தகை கண்டனம்... ஆளும் அரசை குறை கூறுவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் திட்டவட்டம்...

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தெளிவான பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தல்... தென்னிந்தியாவுக்கான பிரதிநிதித்துவத்தை குறைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு..

கச்சத்தீவு, ரஞ்சி கோப்பை
கச்சத்தீவு | “அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார்.. ஆளுநர் போட்டியிட வேண்டாம்” - அமைச்சர் ரகுபதி

தமிழ்நாட்டில் அரசியல் லாபத்திற்காக தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சனம்... புதிய கல்விக் கொள்கையில் அனைத்து இந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் விளக்கம்...

பொதுத்தேர்வு எழுதும் +1,+2 மாணாக்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து... கடின உழைப்புக்கு முழுவெற்றி கிடைக்க மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் அறிக்கை....

சீமான்
சீமான்pt web

விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, தன்னை பாலியல் குற்றவாளி என்று எப்படி கூறலாம்... நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி...

தன்னுடைய கண்ணீர் சும்மா விடாது..... பாலியல் தொழிலாளி என சீமான் விமர்சனம் செய்த நிலையில் கண்ணீருடன் நடிகை சாபம்....

இசையமைப்பாளர் இளையராஜாவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு... லண்டனில் நடைபெறும் சிம்பொனி நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்து நினைவுப்பரிசை வழங்கிய முதல்வர்...

கச்சத்தீவு, ரஞ்சி கோப்பை
இபிஎஸ்-க்கு நெருக்கடி தரும் நிர்வாகிகள்.. பலத்தை கூட்டுகிறாரா ஓபிஎஸ்? அதிமுகவில் நடப்பது என்ன?

முதல்வர் ஸ்டாலினுக்கு இளையராஜா நன்றி... நிறைந்த பணிச்சூழலில் நேரம் ஒதுக்கி வந்து வாழ்த்தியது மிக்க மகிழ்ச்சி என பதிவு..

கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

vidarbha ranji trophy 2024-2025
vidarbha ranji trophy 2024-2025x

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நிறுத்தம் குறித்த திட்டம் விரைவில் அமெரிக்காவிடம் வழங்கப்படும்.... பிரிட்டன், பிரான்ஸ், உக்ரைன் இணைந்து திட்டம் வகுத்து வருவதாக இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் அறிவிப்பு...

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விதர்பா அணி சாம்பியன்... கேரளாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முன்னிலை மூலம் வெற்றி...

கச்சத்தீவு, ரஞ்சி கோப்பை
“அப்பாக்காக உங்க பிறந்தநாளயே மாத்திட்டிங்க” இசைஞானியின் சிம்பொனி அரங்கேற்றத்திற்கு முதல்வர் வாழ்த்து

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com