Representational image
Representational imagex page

செலுத்திய வரியை விட குறைவான நிதிப் பங்கீட்டை பெற்ற மாநிலங்கள்.. மத்திய அரசு அளித்த அறிக்கை!

தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் மத்திய அரசுக்கு செலுத்தும் வரியை விட அங்கிருந்து பெறும் வரிப்பங்கீடு குறைவாகவே இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்துப் பார்க்கலாம்.
Published on

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 2020-21 நிதியாண்டில் இருந்து 2024-25 நிதியாண்டு வரை வரி வருவாய், வரிப் பங்கீடு குறித்த தகவல்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது. இவ்விவரங்களை விரிவாக ஆய்வு செய்து புள்ளிவிவரங்களை தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.

parliament
நாடாளுமன்றம்எக்ஸ் தளம்

அதன்படி, மஹாராஷ்ட்ராவிலிருந்து மத்திய அரசுக்கு வரியாக செல்லும் பணத்தை விட அங்கிருந்து வரிப் பங்கீடாக பெற்ற பணம் 29.45% குறைவாக இருந்தது. இதேபோல, கர்நாடகா 8.8%, ஹரியானா 4.3%, குஜராத் 3.5% செலுத்தியதை விட குறைவாகப் பெற்றுள்ளன. தமிழ்நாட்டிற்கு இவ்வித்தியாசம் 2.95% ஆக உள்ளது. தெலங்கானாவிற்கு இது 1.4% ஆகவும் கோவாவிற்கு 0.04% ஆகவும் உள்ளது.

Representational image
திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக தீர்மானம்; 120எம்பிக்கள் கையெழுத்து

செலுத்திய வரியை விட அதிகமாக பெற்ற மாநிலங்கள்.!

அதே நேரம் செலுத்திய வரியை விட வரிப் பங்கீடு அதிகமாக பெற்ற மாநிலங்களில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலம் 11.2% தொகையை கூடுதலாகப் பெறுகிறது. பிகார் 8%, மத்திய பிரதேசம் 5.5%, ராஜஸ்தான் 3.55% தொகையை கூடுதலாகப் பெற்றுள்ளன.

Representational image
கர்நாடகா | ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு.. அரசின் அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com