"தமிழர் பிரதமர்" To "தமிழர் ஒடிசாவை ஆளலாமா?"- அந்தர்பல்டி அடித்த பாஜக தலைவர்கள்; திசைமாறிய பரப்புரை!

பல மொழி, கலாசாரம், பண்பாடு கொண்ட நாடு நம்முடையது.. வேற்றுமைகள் இருக்கத்தான் செய்யும்.,, ஆனால், அதையெல்லாம் தாண்டி மக்களை ஒற்றுமைப்படுத்தும் வேலையைத்தான் தலைவர்கள் செய்யவேண்டும்..,
பிரதமர் மோடி, அமித்ஷா
பிரதமர் மோடி, அமித்ஷாpt web

பிரதமர் மோடி, அமித்ஷா எடுத்த ரிவர்ஸ் கியர்

சமூக வலைதளங்களில் உலா வருபவர்கள் யாரும் நிச்சயமாக இந்த மீம்ஸைக் கடக்காமல் வந்திருக்க முடியாது.., அந்நியன் திரைப்படத்தில், “என்னது கம்ப்ளைன்ட் கொடுத்ததும் ஒரே நம்பர், அத ஓப்பன் பண்ணதும் ஒரே நம்பரா?” என ஷாக் ஆவார் நடிகர் பிரகாஷ்ராஜ்.., அந்த டெம்ப்ளேட்டை வைத்தே இணையத்தில் ஆயிரமாயிரம் மீம்ஸ்கள் கொட்டிக்கிடக்கின்றன... ஒரு விஷயத்தைச் சொல்வதும், ஆனால், அதற்கு நேர்மாறாக நடப்பதும் ஒரே ஆளா? என்கிற ரீதியில் இருக்கும்.., அதே போன்ற ஒரு விஷயம்தான் தற்போது அரசியல் களத்திலும் நடந்தேறியிருக்கிறது.., தேர்தலுக்கு முன்பாக, “தமிழர் ஒருவர் பிரதமராக வரவேண்டும்” எனப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாதான், தற்போது “ஒடிசாவை தமிழர் ஆளலாமா” எனக் கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்.., அவர் மட்டுமல்ல, தமிழர்களையும், தமிழ்நாட்டையும் போற்றிப் புகழ்ந்த பிரதமர் நரேந்திரமோடியும் கூட, தற்போது ரிவர்ஸ் கியர் எடுத்திருக்கிறார்.. இதற்கிடையே, நடந்து முடிந்திருப்பது ஐந்து கட்டத் தேர்தல். மே 25 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆறாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரையும் நிறைவடைந்துள்ளது. இதில் பிரதானமாக ஒடிசாவில் 43 சட்டமன்ற தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தலும், 6 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழர்களைப் ‘புகழ்ந்த’ பாஜக தலைவர்கள்

பிரதமர் மோடி
பிரதமர் மோடிpt web

நாடாளுமன்றத் தேர்தல், கடந்த ஏப்ரல் 19-ல் தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடந்துகொண்டிருக்கிறது. முதற்கட்டத்திலேயே தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.., அந்த முதற்கட்டத் தேர்தல் முடியும்வரை தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாட்டுக்கு வந்த பாஜக தலைவர்கள் தமிழர்களையும், தமிழ்நாட்டையும் ஆகா, ஓகோவென புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.

பிரதமர் மோடி, அமித்ஷா
இஸ்லாமிற்கு மாறாவிட்டால், AI மூலம் ஆபாச Videoவை உருவாக்கி வெளியிடுவேன்” - பெண்ணை மிரட்டிய மர்மநபர்!

புல்லரிக்கும் அளவுக்கு புகழ் மாலை                                 

குறிப்பாக இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட பத்து முறை தமிழ்நாட்டுக்கு வந்த இந்தியப் பிரதமர் மோடி, குறிப்பாக பல்லடத்தில் நடந்த, ‘என் மண், என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு விழாவில், “தமிழக மக்கள் தூய்மையான உள்ளம் படைத்தவர்கள். மிகச் சிறந்த புத்திசாலிகள்” என புகழ்ந்து தள்ளினார்.., அது மட்டுமல்லாமல், “இந்தியாவின் வளர்ச்சியில், தமிழகத்தின் இந்த கொங்கு மண்டலம் பல வகைகளில் அங்கம் வகிக்கிறது. ஜவுளி, தொழிற்சாலைகள் நிறைந்த இந்த பகுதி, இந்தியாவின் காற்றாலை மின் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது” என நமக்கே புல்லரிக்கும் அளவுக்கு புகழ் மாலை சூட்டினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி முகநூல்

அங்கு மட்டுமல்ல, திருநெல்வேலியில் நடந்த கூட்டத்தில் பேசிய மோடி, “திருநெல்வேலி அல்வாவைப் போல இனிப்பான மற்றும் இளகிய மனம்கொண்டவர்கள் இந்த ஊர்க்காரர்கள். பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் வெளிநாடுகளுடன் போட்டியிடுகிறது. தமிழ்நாடும் அதில் பெரிய வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. டெல்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தூரம் மிகவும் குறைந்துள்ளது. தமிழகத்துக்கும், ராமருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார்கள். ராமேசுவரம், தனுஷ்கோடி கோயில்களுக்குச் சென்று ஆசீர்வாதம் பெற்ற பின்னர்தான், அயோத்தி ராமர் கோயிலைத் திறந்துவைத்தேன்” எனப் பேசி கட்சி சாராத நடுநிலையாளர்கள் வரைக்கும் அட என சொல்ல வைத்தார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி, அமித்ஷா
AIIMS மருத்துவமனைக்குள் காருடன் புகுந்த போலீஸ்... பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மருத்துவர் கைது!

ஜெகந்நாதர் கோயில் சாவி தமிழ்நாட்டிலா?

இது மட்டுமா, அதற்கு முன்பாக நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர், "பாரத அன்னை வாழ்க" என தமிழில் பேசி தனது உரையை ஆரம்பித்ததோடு, “கோட்டை மாரியம்மன் கோயிலில் உள்ள அம்மனை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன்” எனப் பேசினார். அவ்வப்போது தமிழ் வார்த்தைகளைப் பேசியதோடு மட்டுமல்லாமல், அவருக்குக் காசியில் தமிழ் சொல்லிக்கொடுத்த சேலத்து நண்பர், விபத்தில் உயிரிழந்த கதையைச் சொல்லி நம்மை உணர்ச்சிக் கடலிலும் ஆழ்த்தினார்.., இவையெல்லாம் முதற்கட்டத் தேர்தல் முடியும் வரைக்கும்தான்.., அடுத்தடுத்த கட்டம் நகர, நகர மதம், இனம், மொழி என சர்ச்சைக்குரிய வகையில் பிரதமர் தொடங்கி பலர் பேசுவது பல்வேறு விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.., அதிலும் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் முதற்கட்ட தேர்தலுக்கு முன்பாக புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி, தற்போது அதற்கு எதிர்த்திசையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறார்.

PM Modi
PM Modiபுதிய தலைமுறை

ஒடிசாவில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போன விவகாரம் குறித்து பேசினார். அதில், “நமது வீட்டு சாவி காணாமல் போனால் ஜெகந்நாதரிடம் முறையிடலாம். ஆனால் ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவியை 6 ஆண்டுகளாகக் காணவில்லை. இந்த சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்” என்று ஒரே போடாகப் போட்டார். ஒடிசா மக்கள் உணர்வுபூர்வமாக அணுகும் ஒரு விஷயத்தை, தமிழ்நாட்டின் பக்கம் திருப்பியதை யாருமே எதிர்பார்க்கவில்லை. எதிர்க்கட்சிகள் கொந்தளித்ததும், தனிப்பட்ட ஒருவரை விமர்சித்ததை, தமிழ்நாட்டை விமர்சித்ததாக எதிர்க்கட்சிகள் திசைதிருப்புவதாக, தமிழக பாஜகவினர் மல்லுக்கட்டினர். எனினும் தமிழ்நாடு என பிரதமர் குறிப்பிடும்போது, ஒடிசா மாநில மக்களின் மனதில் அது என்னவாக பதியும் என்பதை யாரும் சொல்லி புரிய வைக்கவேண்டியதில்லை.

பிரதமர் மோடி, அமித்ஷா
மக்களவை தேர்தல் | முதன்முறையாக 400 இடங்களுக்கும் கீழ் காங்கிரஸ் போட்டி... காரணம் என்ன?

INDIA கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு ஒரு பிரதமர்

அதுமட்டுமல்ல, உ.பி பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, “INDIA கூட்டணியின் தலைவர்கள் தென்னிந்தியாவில் மோசமான வார்த்தைகளால் உ.பி. மக்களை விமர்சித்து பேசுகின்றனர். INDIA கூட்டணி கட்சிகளான தமிழ்நாட்டில் திமுக, கேரளாவில் இடதுசாரிகள், கர்நாடகா, தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிகள் உ.பி. மக்களுக்கு எதிராக இழிவாக விமர்சிக்கின்றனர். உங்களை இழிவாக பேசும் "INDIA" கூட்டணி தலைவர்களுக்காக நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்?" எனப் பேசியிருந்தார்.., அதற்கும் உனடியாக எதிர்ப்புக் கிளம்பியது. வழக்கம்போலவே இந்தியாக் கூட்டணிக் கட்சித் தலைவர்களைத்தானே விமர்சித்தார் பிரதமர், மக்களையா விமர்சித்தார் என்கிறார்கள் பாகஜவினர்.., ஆனால், உ.பி மக்களை விமர்சித்தால் தென்னிந்திய மக்கள் வாக்களிப்பார்கள் எனப் பேசுவது என்ன மாதிரியான மனநிலை, நாட்டில் ஒரு பகுதி மக்களை, மற்றொரு பகுதி மக்கள் தரம் குறைவாகப் பார்க்கிறார்கள், அப்படிப் பேசினால் வாக்களிப்பார்கள் என யோசிப்பது என்ன மாதிரியான பார்வை?

pm modi
pm modiptweb

அதுமட்டுமல்ல, ``INDIA கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு மு.க.ஸ்டாலின் பிரதமராக இருப்பார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஓராண்டு பிரதமராக இருப்பார். ஏதேனும் ஒரு ஆண்டு மிச்சம் இருந்தால் ராகுல் காந்தி பிரதமராக இருப்பார். INDIA கூட்டணி கூறுவது போல் ஒரு நாட்டை இவ்வாறெல்லாம் நடத்த முடியாது" எனப் பீகாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.., அதற்கும் "தமிழர் ஒருவர் பிரதமர் ஆகக்கூடாதா?" என எதிர்ப்புக் கிளம்பியது.., ஆனால், அது INDIA கூட்டணியையும், ஸ்டாலினையும் விமர்சித்துச் சொன்னது, அதைத் தமிழர் ஒருவர் என எடுத்துக்கொள்ளக்கூடாது என விளக்கம் கொடுத்தனர் பாஜகவினர். ஆனால், இன்று அதே அமித் ஷா "ஒடிசாவைத் தமிழர் ஆளாலாமா" என நேரடியாகவே கேட்டிருக்கிறார்.., அவர், பிஜூ ஜனதாளத்தின் முக்கிய முகமாக மாறியிருக்கும், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான வி.கே.பாண்டியன் குறித்துதான் இப்படிப் பேசியிருக்கிறார்... அவரைத்தான் குறிப்பிட வேண்டும் என்றால் அவரின் பெயரையே குறிப்பிட்டுக் கேட்டிருக்கலாம்.., ஆனால், `தமிழர் ஆளலாமா?’ இன ரீதியான பிரிவினையைத் தூண்டும் வகையில் கேட்பதை எப்படி ஏற்றிக்கொள்ள முடியும்.

பிரதமர் மோடி, அமித்ஷா
பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷம்... சுரங்க அறையில் நீடிக்கும் மர்மம்... உள்ளே என்னதான் உள்ளது?

தமிழர் பிரதமராகாமல் இருப்பதற்கு திமுக காரணம்

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி என தேச ஒற்றுமையை பறைசாற்றுவதாக காட்டிக்கொள்ளும் பாஜக தலைவர்கள், தேர்தலுக்காக வட இந்தியர்கள் தென் இந்தியர்கள் என பிராந்தியப் பிரிவினை பேசுவதும், தமிழர், ஒடியர் என இனப் பிரிவினை பேசுவதும் தகுமா?

மத்திய உள்துறை அமைச்சர்
மத்திய உள்துறை அமைச்சர்PT வலை

தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பாக, தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா,`` தமிழகத்தை சேர்ந்த காமராஜர், ஜி.கே மூப்பனார் ஆகிய இருவரும் பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இருமுறை பிரதமர் வேட்பாளர் தேர்வாகாமல் போனதற்கு திமுகதான் காரணம். வரும் காலத்திலாவது தமிழரை பிரதமராக்க உறுதியெடுப்போம். தமிழகத்தில் ஏழை குடும்பத்தில் இருந்து முதல்வர், பிரதமர் வர வேண்டும். இதனை பாஜக-வால்தான் உருவாக்க முடியும்’’ எனப் பேசியதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், தற்போது, ஒடிசாவின் முதல்வராகக் கூட தமிழர் ஒரு வரக்கூடாது என்கிறார் அதே அமித்ஷா.., நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒடியா மொழி பேசும் இளைஞர் இம்மாநிலத்தை ஆட்சி செய்வார் எனப் பேசுகிறார்.., ``தமிழகம் தேசியத்தின் பக்கம் என்றைக்கும் இருந்து வருகிறது’’ என முதற்கட்ட தேர்தலுக்கு முன்பாக, பல்லடத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார் பிரதமர் மோடி, ஆனால் இன்று தமிழர், ஒடியர், வட இந்தியர், தென்னிந்தியர் என பாஜக தலைவர்களே பேசி வருகிறார்கள்.

பிரதமர் மோடி, அமித்ஷா
தரக்குறைவாக பேசிய பாஜக வேட்பாளர்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை

பல மொழி, கலாசாரம், பண்பாடு கொண்ட நாடு நம்முடையது.. வேற்றுமைகள் இருக்கத்தான் செய்யும்.,, ஆனால், அதையெல்லாம் தாண்டி மக்களை ஒற்றுமைப்படுத்தும் வேலையைத்தான் தலைவர்கள் செய்யவேண்டும்.., இதற்கு முன்பிருந்த தலைவர்களும் அதைத்தான் செய்திருக்கிறார்கள்.., தேர்தல் வெற்றிக்காக மக்களைத் தூண்டாடுவது தேசத்துக்கு நல்லதல்ல.., “முதற்கட்டமாகவே தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவித்ததும்., தொடர்ந்து பாஜகவினர் பேசும் கருத்துக்களும் எதேச்சையானது அல்ல” என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனத்தையும் இப்போது முற்றிலுமாக புறம் தள்ளிவிட முடியவில்லை..,

பிரதமர் மோடி, அமித்ஷா
ஒடிசாவை தமிழர் ஆள வேண்டுமா? - உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com