பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷம்... சுரங்க அறையில் நீடிக்கும் மர்மம்... உள்ளே என்னதான் உள்ளது?

பொக்கிஷ அறை 2 பெரிய பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள் பகுதியில் உள்ள அறையில் மிகவும் விலை மதிப்பு மிக்க நகைகள் உள்ளதாகவும் வெளிப்பகுதியில் அன்றாடம் இறைவனுக்கு அணிவிக்கப்படும் நகைகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 பூரி ஜெகந்நாதர்
பூரி ஜெகந்நாதர்புதியதலைமுறை

தேர்தல் பரப்புரை அனல் பறக்க நடந்து வரும் நிலையில் ஒடிசாவில் பிரதமர் கூறிய ஒரு குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி தமிழ்நாட்டுக்கு சென்று விட்டதாக அவர் கூறியிருந்த நிலையில் அந்த அறைக்குள் என்னதான் உள்ளது என பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூரி ஜெகந்நாதர் கோயில்
பூரி ஜெகந்நாதர் கோயில்

12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூரி ஜெகந்நாதர் கோயிலுக்கு பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு மன்னர்கள் வெள்ளி, தங்கம், வைரம், வைடூர்யம் என ஏராளமான விலை மதிப்பற்ற ஆபரணங்களை காணிக்கையாக அளித்தனர். அவைதான் அந்த பொக்கிஷ அறைக்குள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோயில் தரைக்கு கீழே சுரங்க அறை ஏற்படுத்தி அதற்குள் நகைகள் வைக்கப்பட்டுள்ளன.

 பூரி ஜெகந்நாதர்
சூரிய புயல் தாக்கத்தால் பூமியில் இவ்வளவு மாறுதல்கள் ஏற்பட்டதா! மூத்த விஞ்ஞானி கொடுத்த அசத்தல் தகவல்!

பொக்கிஷ அறை 2 பெரிய பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள் பகுதியில் உள்ள அறையில் மிகவும் விலை மதிப்பு மிக்க நகைகள் உள்ளதாகவும் வெளிப்பகுதியில் அன்றாடம் இறைவனுக்கு அணிவிக்கப்படும் நகைகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் உள் அறையில் உள்ள ஆபரணங்கள் பற்றிதான் தற்போது மர்மம் நிலவி வருகிறது.

இது கடைசியாக 1978இல் திறக்கப்பட்டது. அப்போது அதை அருகில் இருந்து கண்ணால் பார்த்த ரபீந்திர நாராயண் மிஸ்ரா என்ற ஊழியர், நகைகள் அனைத்தும் துணியில் சுற்றி மரப்பெட்டிக்குள் வைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். தரைக்கு கீழேயும் கடலை ஒட்டியும் உள்ள பகுதி என்பதால் பொக்கிஷ அறையின் நிலைமை குறித்து ஆராய 1984இல் தொல்லியல் துறை குழு ஒன்று உள்ளே சென்றது.

ஆனால் பொக்கிஷ அறையின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறி அக்குழு திரும்ப வந்துவிட்டது. பாம்புகள் சீறியதாகவும் அதனால் அவர்கள் திரும்பி வந்துவிட்டதாகவும் கூட தகவல்கள் உள்ளன. இந்தச் சூழலில் 2018ஆம் ஆண்டு பொக்கிஷ அறையின் சாவி காணாமல் போனதாக அதிர்ச்சி தரும் தகவலும் வெளியானது. இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை அரசிடம் அளித்துவிட்டாலும் அதற்குள் என்ன உள்ளது என்பதை அரசு தெரியப்படுத்தவில்லை.

மறுபுறம் “இறைவனின் சொத்தை பார்க்க முயன்றால் பேரழிவு ஏற்படும். அதை திறப்பவர்களை ஜெகந்நாதர் மன்னிக்கமாட்டார்” என கூறுகிறார் கோயிலில் 45 ஆண்டுகளாக வேலைசெய்து வரும் நரசிங்க பூஜா பாண்டா.

இந்த சூழலில் பொக்கிஷ அறை குறித்த கேள்விகள் ஒவ்வொரு தேர்தலின் போதும் எழும் நிலையில் அதற்கு விடைதான் இன்னும் தெரியாமல் உள்ளது.

 பூரி ஜெகந்நாதர்
பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை சாவி.. பிரதமர் விமர்சனம்.. முதல்வர் எதிர்வினை.. நடப்பது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com