“தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை?” - உச்சநீதிமன்றம் கேள்வி!

“ஒவ்வொரு தேர்தல் பத்திரத்திற்கும் தனித்தனி அடையாள எண்கள் இருக்கும். அதனை எஸ்பிஐ வங்கி வெளியிடாதது ஏன்?” என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தேர்தல் பத்திரம், உச்ச நீதிமன்றம்
தேர்தல் பத்திரம், உச்ச நீதிமன்றம்ட்விட்டர்

தேர்தல் பத்திரத்தை சட்ட விரோதம் என கடந்த மாதம் (பிப்ரவரி 15) அறிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக இயற்றப்பட்ட சட்ட திருத்தங்கள் அனைத்தையும் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியிருந்தது. இதுதொடர்பான தீர்ப்பில், “கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரம் பெற்ற அரசியல் கட்சிகள் குறித்த விவரங்களை மூன்று வாரத்திற்குள் இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் வழங்க வேண்டும்” என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தேர்தல் பத்திரம், உச்ச நீதிமன்றம்
”தேர்தல் பத்திரம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது” - உச்ச நீதிமன்ற தீர்ப்பின் 15 முக்கிய அம்சங்கள்!

இதில் தங்களால் 3 வாரத்துக்குள் சமர்ப்பிக்க முடியாது என்றும், 4 மாதம் கால அவசாகம் வேண்டும் என்றும் கேட்டு எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் மனு தொடர்ந்தது. இந்த 4 மாதம் என்பது, மக்களவை தேர்தல் முடிந்தபின் வருவது என்பதால் வங்கி தரப்பு இவ்விவகாரத்தில் அரசியல் செய்வதாக சொல்லி விமர்சிக்கப்பட்டது.

SBI
SBIpt desk

இந்நிலையில் அவகாசம் தொடர்பான மனுவை மார்ச் 11 அன்று விசாரித்த உச்சநீதிமன்றம், “வங்கி செயல்படக்கூடிய நேரத்திலேயே, அதுவும் மார்ச் 12க்குள்ளேயே , கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அரசியல் கட்சிகள் யார் யாரிடத்தில் இருந்து எவ்வளவு தொகையை பெற்றன, நன்கொடையாளர் யார் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ வங்கி வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.

தேர்தல் பத்திரம், உச்ச நீதிமன்றம்
“நாளை மாலைக்குள் வேண்டும்...” - SBI-ஐ கடுமையாக எச்சரித்த உச்சநீதிமன்றம்

மேலும், வங்கி வழங்கிய இந்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15க்குள் இணையத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில், எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திர விபரங்களை தேர்தல் ஆணையத்தில் மார்ச் 12 அன்று வழங்கியது.

தேர்தல் பத்திரம், உச்ச நீதிமன்றம்
உச்சநீதிமன்றம் சொன்னபடி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்த எஸ்.பி.ஐ.!

அந்தவிவரங்களை மார்ச் 13ஆம் தேதி (நேற்று முன்தினம்) தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டது.

தேர்தல் பத்திரம், உச்ச நீதிமன்றம்
2019 - 24 | 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை... 10 நாளில் 3,346... முழு விவரங்களையும் அளித்த SBI!

மேலும் வெளியான தகவல்களை கொண்டு, ‘தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவில் ஒரு சில திருத்தம் செய்ய வேண்டும்’ எனக் கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு இன்று (மார்ச் 15) விவசாரித்தது.

தேர்தல் பத்திரம், உச்ச நீதிமன்றம்
தேர்தல் பத்திரம், உச்ச நீதிமன்றம்ட்விட்டர்

அப்போது நீதிமன்றம், “தேர்தல் பத்திரங்களை யார் வாங்கினார்கள்? அவர்களது பெயர் என்ன? எந்த தேதியில் வாங்கினர்கள்? எவ்வளவு தொகை கொடுத்து வாங்கினார்கள்? எந்த அரசியல் கட்சி எந்த தேதியில் அந்த தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து பணமாக மாற்றினார்கள்? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளியிட உத்தரவு பிறப்பித்து இருந்தோம். எங்கள் உத்தரவு மிக தெளிவாக உள்ளது. இதில் குறிப்பிட்ட விவரங்களை மட்டும் வழங்கிவிட்டு, தேர்தல் பத்திர எண்களை மட்டும் SBI வெளியிடாதது ஏன்?

தேர்தல் பத்திரத்தின் எண்கள்தான் நன்கொடை பெறுபவரையும், அதனை வாங்குபவரையும் இணைக்கும் ஒன்று. அப்படி இருக்க, தேர்தல் பத்திரங்களின் பிரத்யேக எண்ணை ஏன் வங்கி குறிப்பிடவில்லை? மேலும் இந்த விவகாரத்தில் எஸ்பி இங்கு இருந்திருக்க வேண்டும். ஆனால், இல்லை.

விரைவில் முழு விவரத்தினை எஸ்பிஐ வங்கி தெரிவிக்க வேண்டும். மேலும், இந்த விவரங்களை ஏன் வெளியிடவில்லை என்பதையும் எஸ்பிஐ வங்கி திங்கட்கிழமைக்குள் விளக்கமாக அளிக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தது.

மேலும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக தாக்கல் செய்த ஒரிஜினல் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் நகல் எடுத்துக்கொண்டு அதை மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு திருப்பி வழங்கி விட வேண்டும் என உச்ச நீதிமன்ற பதிவாளருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com