மூன்றரை வயது குழந்தையை கடித்த நாய்.. சரியான நேரத்தில் வந்து காப்பாற்றிய தாய்.. வைரலாகும் வீடியோ!

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த மூன்றரை வயது குழந்தையை தெருநாய் கடித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
குழந்தையை கடித்த நாய்
குழந்தையை கடித்த நாய்புதியதலைமுறை

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பெரிங்காடு பகுதியில் உள்ள வீட்டில் கெளதம் கிருஷ்ணா என்ற மூன்றரை வயதுடைய குழந்தை, வீட்டின் முன் பகுதியில் விளையாடி கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென வீட்டின் முன் பகுதியில் வந்த தெருநாய் குழந்தையை தாக்கியது, இதில் சுற்றிவளைத்து ஓடிய குழந்தை கீழே விழுந்தது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பதறி ஓடிவந்த தாய் தெரு நாயை விரட்டி விரட்டி குழந்தையை உடனே மீட்டார்.

குழந்தையை கடித்த நாய்
"உன்னோட செல்ஃபோன்னா நம்பர் சொல்லு கால் பண்றேன்.." திருடர்களுக்கு செக் வைத்து தூக்கிய காவலர்கள்!

சரியான நேரத்தில் வந்து குழந்தையை மீட்டதால் பெரும் அபாயத்தில் இருந்து குழந்தை பாதுகாக்கப்பட்டது. இருப்பினும் நாய் கடித்ததில் காயங்களுடன் இருந்த குழந்தையை பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

விளையாடி கொண்டிருந்த குழந்தையை தெரு நாய் கடிப்பதும், குழந்தையை பெற்றோர் மீட்கும் காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அது தொடர்பான காட்சிகள் இணையதளங்கில் அதிகம் பரவி வருகிறது.

குழந்தையை கடித்த நாய்
திரிசூலம் - மீனம்பாக்கம் இடையே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்.. தாமதமான ரயில்கள்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com