ம.பி | கழுத்தில் பாம்பை போட்டு விபரீத ஒத்திகை.. பாம்பு பிடி வீரருக்கு நேர்ந்த சோகம்.. ஷாக் வீடியோ!
மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில், விஷ நாகப்பாம்பை கழுத்தில் சுற்றிக் கொண்டு பைக்கில் சென்ற ஒருவர் உயிரிழந்தார். தீபக் மஹாவர் என்ற அந்த நபர் பாம்பு கடித்ததில் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு முன்பு அருகில் இருந்த ஒருவர் பாம்பு பிடி வீரரான தீபக் மஹாவர்வை தனது மொபைலில் வீடியோவாக பதிவுச் செய்தார்..
அப்படி அவர் கழுத்தில் நாகப்பாம்புடன் சுற்றித் திரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. ஜேபி கல்லூரியில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிந்த தீபக், பாம்புகளைக் காப்பாற்றுவதில் பெயர் பெற்றவர். மேலும் இவர் ஆயிரக்கணக்கான பாம்புகளைக் காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது. வரவிருக்கும் ஷ்ரவண மாத ஊர்வலத்தின் போது காட்சிப்படுத்துவதற்காக, சமீபத்தில் ஒரு பாம்பைப் பிடித்து கண்ணாடிப் பாத்திரத்தில் அடைத்து வைத்திருந்தார்.
சம்பவத்தன்று, தீபக் தனது குழந்தைகளை பள்ளியில் இறக்கிவிட்டுட்டு தனது கழுத்தில் ஒரு மாலையைப் போல தனது நாகப்பாம்பைச் சுற்றிக் கொண்டார் எனக் கூறப்படுகிறது. பின்னர், திடீரென அந்த நாகப்பாம்பு அவரைக் கடித்தது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு சிகிச்சையின் போது அவர் உயிரிழந்தார். அவருக்கு விஷ எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்ட போதிலும், மருத்துவ உதவி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் அது பலனளிக்கவில்லை.
தீபக்கிற்கு ரௌனக் (12) மற்றும் சிராக் (14) eன்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது மனைவி முன்பே இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.