முக்கியத் தகவல்கள் மறைப்பு| அதானி குழுமத்தில் விதிமுறைகளை மீறி முதலீடு.. கண்டுபிடித்த செபி!

அதானி நிறுவனத்தின் முதலீடு செய்துள்ள 12 வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் முக்கியத் தகவலைகளை மறைத்ததையும் முதலீட்டு வரம்புகளை மீறி இருப்பதையும் இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பான செபி கண்டுபிடித்துள்ளது.
அதானி, செபி
அதானி, செபிட்விட்டர்

அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிக்கை வெளியிட்டது. பங்கு மதிப்பில் உயர்வைக் காட்டியதோடு, இதனால் பெரும் இழப்பை எதிர்கொண்ட அதானி குழுமம், பணக்காரப் பட்டியலிலும் இறக்கத்தைச் சந்தித்தது. மேலும், இவ்விவகாரம் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது.

பின்னர், வழக்கின் தீர்ப்பு, மக்களவைத் தேர்தல் கருத்துக்கணிப்பு உள்ளிட்டவற்றால் மீண்டும் அதானி குழுமம் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கியது. அதேநேரத்தில், ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அதானி குழுமத்தின் மீதான வழக்கை செபி எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கட்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதையும் படிக்க: 2022-ல் 65,960 இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை.. இரண்டாவது இடத்தில் இந்தியா!

அதானி, செபி
லஞ்சம் கொடுத்ததா அதானி நிறுவனம்.. விசாரணையை தொடங்கிய அமெரிக்கா.. மீண்டும் சிக்கல்?

இந்த நிலையில், அதானி நிறுவனத்தின் முதலீடு செய்துள்ள 12 வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் முக்கியத் தகவல்களை மறைத்ததையும் முதலீட்டு வரம்புகளை மீறி இருப்பதையும் இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பான செபி கண்டுபிடித்துள்ளது.

கடந்த ஆண்டு முதலே அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து வரும் செபி, அதில் பல்வேறு விதிமீறல்கள் மற்றும் முதலீட்டு வரம்பு மீறல்கள் இருப்பதைக் கண்டறிந்தது.

அதானி குழுமம்
அதானி குழுமம்file image

இதைத் தொடர்ந்து செபி அதானி குழுமத்தின் முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படுவதுபோல் இருக்கும் ஒரு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனத்தைக் குறிவைத்துச் செபி ஆய்வு செய்யும் பணிகளைத் துவங்கியது. ஆனால் அதானி குழுமம் இத்தகைய செயல்பாடுகள் ஏதுமில்லை என செபியின் குற்றச்சாட்டை ஏற்க மறுத்திருந்தது.

இதையும் படிக்க: மன்னிப்பு விளம்பரம்: மீண்டும் மீண்டும் ’குட்டு’ வாங்கும் பதஞ்சலி.. கண்டித்த உச்ச நீதிமன்றம்!

அதானி, செபி
2 லட்சம் கோடி! - குஜராத்தில் புதிய பாய்ச்சலில் முதலீடு செய்யும் கௌதம் அதானி! எந்த துறையில் தெரியுமா?

இதையடுத்து விதிமீறல்கள் பற்றி விளக்கம் தருமாறு இந்த ஆண்டு தொடக்கத்தில் அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. அதில், ‘வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், அதானி குழும நிறுவனங்களில் தங்கள் முதலீட்டைத் தனித்தனி நிதி நிறுவன நிலையில் அறிவித்து வந்தன. ஆனால், ஒட்டுமொத்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் குரூப் அளவில் முதலீட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்’ என செபி உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

கெளதம் அதானி
கெளதம் அதானிட்விட்டர்

இந்த நிலையில் தற்போது செபி நோட்டீஸ் அனுப்பிய 12 வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களில் 8 முதலீட்டு நிறுவனங்கள், விதிமுறைகளை மீறியது தொடர்பான தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் அபராதம் மட்டும் செலுத்திக் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்க செபி அமைப்பிற்கு எழுத்துப்பூர்வமாக கோரிக்கை அனுப்பியுள்ளன. இதன்மூலம் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முறையற்ற வகையில் முதலீடு செய்துள்ளது உறுதியாகியுள்ளது.

இதையும் படிக்க: புதிய மதுபான முறைகேடு| கெஜ்ரிவால், கவிதாவுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

அதானி, செபி
2 லட்சம் கோடி! - குஜராத்தில் புதிய பாய்ச்சலில் முதலீடு செய்யும் கௌதம் அதானி! எந்த துறையில் தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com