புதிய மதுபான முறைகேடு| கெஜ்ரிவால், கவிதாவுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் அடுத்த மாதம் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறை
அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறைட்விட்டர்

இந்தியாவின் ஜனநாயக தேர்தல் பெருவிழாவுக்கு மத்தியில், ஆம் ஆத்மி கட்சி பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அடுத்தடுத்து ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும், தன் பதவியை ராஜினாமா செய்யாமல் சிறையில் இருந்தபடியே உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.

அமலாக்கத் துறை, அரவிந்த் கெஜ்ரிவால்
அமலாக்கத் துறை, அரவிந்த் கெஜ்ரிவால்ட்விட்டர்

அதேநேரத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் அடுத்த மாதம் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவருடைய நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், திகார் சிறையில் காணொளிக் காட்சி வாயிலாக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் மே 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தெலங்கானா எம்எல்சியும், முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளுமான பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் நீதிமன்றக் காவலையும் மே 7ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: ஆசிரியர் நியமன ஊழல்.. 24 ஆயிரம் பணியிடங்கள் ரத்து.. கொல்கத்தா நீதிமன்றம் அதிரடி!

அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறை
”ஜாமீன் பெறுவதற்காக இனிப்பை அதிகம் சாப்பிடுகிறார்” - அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் ED குற்றச்சாட்டு!

திகார் சிறையில் இருக்கும் கெஜ்ரிவால், நீரிழிவு நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. அவருக்கு, இன்சுலின் வழங்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேநேரம், கெஜ்ரிவாலுக்கு ரத்தத்தில் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க இன்சுலின் ஊசி அவசியமா என்பதை ஆய்வு செய்யவும், அவரது பிற உடல்நல பிரச்னைகளை பரிசோதிக்கவும் மருத்துவக்குழு ஒன்றை அமைக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, நீரிழிவு நோயாளியான கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க நீதிமன்றம் அனுமதி அளித்தும் சிறை நிர்வாகம் அதை வழங்கவில்லை என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியிருந்தது. கெஜ்ரிவால் இன்சுலின் கேட்கவில்லை என சிறை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்முகநூல்

இதையடுத்து, ’தாம் இன்சுலின் கேட்கவில்லை என திகார் சிறை நிர்வாகம் தவறான தகவலை தெரிவித்துள்ளது’ என சிறைக் கண்காணிப்பாளருக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு சர்க்கரை அளவு 320-ஐத் தாண்டியதால் நேற்று இரவு அவருக்கு இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி 2 யூனிட் இன்சுலின் மருந்து செலுத்தப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. சிறைக்குச் சென்ற பின்னர் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்படும் முதல் இன்சுலின் ஊசி இது என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இன்சுலின் செலுத்தப்பட்டதை திகார் சிறை நிர்வாகமும் உறுதி செய்துள்ளது.

இதையும் படிக்க: ஆந்திரா| மகளைக் கடத்த மணமகன் வீட்டார் மீது மிளகாய்ப் பொடி வீச்சு.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. #Video

அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறை
”சிறையில் இருப்பதற்காக சிறப்பு சலுகைகளை அளிக்க முடியாது” - கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்த டெல்லி HC

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com