2 லட்சம் கோடி! - குஜராத்தில் புதிய பாய்ச்சலில் முதலீடு செய்யும் கௌதம் அதானி! எந்த துறையில் தெரியுமா?

குஜராத்தில் கெளதம் அதானி குழுமம் முதலீடு செய்யவுள்ள தொகை குறித்து இங்கு அறிவோம்.
வைப்ரன்ட் மாநாடு, கெளதம் அதானி
வைப்ரன்ட் மாநாடு, கெளதம் அதானிட்விட்டர்

குஜராத் மாநிலம் காந்தி நகரில் 'வைப்ரன்ட் குஜராத்' என்ற பெயரில் 10வது உலகளாவிய மாநாடு நேற்று (ஜன.10) பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. இம்மாநாடு, ஜனவரி 13 வரை நடைபெறவுள்ளது. இதில் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஜப்பான், சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள், குஜராத் மாநிலத்தில் தொழில் முதலீடுகளைச் செய்யவுள்ளன.

இந்த மாநாட்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான், திமோர் அதிபர் ஜோஸ் ராமோஸ் ஹோர்டா உள்ளிட்ட 130 நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். இந்தியா சார்பில் தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, கெளதம் அதானி, லட்சுமி மிட்டல், என்.சந்திரசேகரன், தோஷிரோ சுசுகி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் சிங்கப்பூர் நிறுவனங்கள் சுமார் 27,000 கோடியை முதலீடுகளை செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில் இந்திய பணக்காரர்களில் ஒருவரான கெளதம் அதானி குழுமம், குஜராத்தில் சராசரியாக வருடத்திற்கு 40,000 கோடி ரூபாயை அடுத்த 5 ஆண்டுகளுக்கு என மொத்தம் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. அதானி குழுமத்தின் இந்த 2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் குஜராத் மாநிலத்தில் சுமார் 1 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த வைப்ரென்ட் குஜராத் குளோபல் உச்சி மாநாட்டில் அதானி குழுமம் ரூ.55,000 கோடி முதலீடு செய்ய உறுதியளிக்கப்பட்ட நிலையில், இதில் அதானி குழுமம் 50,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளது. முன்னதாக, தமிழகத்தில் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், அதானி குழுமம் வெறும் 42,768 கோடி ரூபாய் முதலீடு செய்வதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர வேறு சில நிறுவனங்களும் குஜராத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

Key investments include Asandas and Sons Pvt. Ltd. (Rs. 1,100 crores),

Bhitar Enterprises Pvt. Ltd. (Rs. 500 crores),

Tidy Agroceutical Pvt. Ltd. (Rs. 400 crores),

Grainspan Nutrients Pvt. Ltd. (Rs. 375 crores),

Sanstar Ltd. (Rs. 300 crores)

J.M. Coconut Products Pvt. Ltd. (Rs. 300 crores),

Mac Patel Foods Pvt. Ltd. (Rs. 150 crores),

RPA Agriculture Infrastructure and Solutions Pvt. Ltd. (Rs. 140 crores)

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com