தெருவில் படுத்துறங்கும் டிசிஎஸ் ஊழியர்
தெருவில் படுத்துறங்கும் டிசிஎஸ் ஊழியர்எக்ஸ்

சம்பள பாக்கியால் தெருவில் உறங்கிய ஐடி நிறுவன ஊழியர்... TCS-க்கு வலுக்கும் எதிர்ப்பு!

டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஐடி ஊழியர் ஒருவர் தனக்கு சம்பளம் தரவில்லை என டிசிஎஸ் அலுவலகத்தின் வெளியே படுத்துறங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.
Published on

சீ. பிரேம்குமார்

1991இல் இருந்து தாராள மயம், தனியார் மயம், உலகமயம் என்ற மூன்று அம்சங்கள் கொண்ட புதிய பொருளாதாரக் கொள்கையை கடைபிடிக்க தொடங்கிய பிறகு இந்தியாவில் ஐடி துறையின் வளர்ச்சி வேகமெடுத்தது. அதுவரை அதிகம் சம்பளம் தரும் வேலையாக அரசு வேலை மட்டுமே பார்க்கப்பட்டது. அரசு வேலையை நம்பியிருந்த இளைஞர்கள் பட்டாளம் இந்த காலக்கட்டங்களில் ஐடி சேவையை நோக்கி படையெடுத்து நகர்ந்தார்கள். அன்று முதல் இன்று வரை பெரும்பாலான இந்திய இளைஞர்களின் கனவு வேலையாக ஐடி வேலை இருந்து வருகிறது. உலகளவில் ஐடி சேவை துறையில் 5 ஆவது இடத்தில் இந்தியா இருந்து வருகிறது.

தெருவில் படுத்துறங்கும் டிசிஎஸ் ஊழியர்
சிவகங்கை அருகே காவல்நிலைய விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மரணம்!

ஆனால், சமீபகாலங்களில் வேலை வாய்ப்பை பொறுத்தவரை தகவல் தொழில்நுட்பத் துறை அந்த அளவிற்கு சிறப்பானதாக இல்லை என்றே கூறப்படுகிறது. ஐடி துறையில் பல பிரச்சனைகள் நடந்து வருகின்றன. பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஐடி தொழில்நுட்பத்துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான டிசிஎஸ் 12,000 நீக்குவதாக அறிவித்து இருந்தது.

இந்நிலையில், திடீர் பணி நீக்கத்தால் டிசிஎஸ் ஊழியர்கள் பலர் கடுமையான சிக்கலில் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

வைரலான x பதிவு
வைரலான x பதிவு எக்ஸ்

டிசிஎஸ் நிறுவனத்தின் புனே அலுவலகத்தின் வெளியே உள்ள நடைபாதையில் உறங்கும் நபர் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரின் பக்கத்தில் இருந்த கைப்பட எழுதிய கடித்தத்தில் ’சம்பள பாக்கி தராததாலே இந்த நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்’ என எழுதியிருந்தது. இந்த புகைப்படம் பதிவான சிறிது நேரத்தில் இதற்கு டிசிஎஸ் பதிலளிக்க வேண்டும் என்று குரல் எழுந்துள்ளது.

fite x post
fite x postஎக்ஸ்

இச்சம்பவம் குறித்து ஐடி ஊழியர்களுக்கான மன்றம் (FITE) என்னும் அமைப்பு தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.

அந்தப் பதிவில், சவுரப் மோர் என்ற ஊழியர் ஜுலை 29 முதல் ஹின்ஜாவாடியில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்திற்கு வெளியே வசித்து வருவதாகவும், சம்பளம் தராமல் இந்த நிலைக்கு தள்ளபட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

தெருவில் படுத்துறங்கும் டிசிஎஸ் ஊழியர்
முதல்வருடன் பேசியது என்ன? - கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விளக்கம்!

இப்பதிவு வைரலான நிலையில் டிசிஎஸ் நிறுவனம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனால் டிசிஎஸ் நிறுவனம் இச்சம்பவம் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, மோர் திடீரென பல நாட்கள் விடுமுறையில் இருந்ததாகவும், விதிமுறகளின் படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இச்சம்பவம் அங்கீகரிக்கப்படாத விடுமுறை பற்றியது என்றும் வழக்கமான நடமுறைகளின் படியே சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அந்த ஊழியர் மீண்டும் பணியில் சேர கோரிக்கை விடுத்துள்ளார். அவருக்கு தற்காலிகமாக தங்குமிடம் ஏற்பாடு செய்து தந்திருப்பதாகவும், தற்போது அவர் வெளியில் இல்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தெருவில் படுத்துறங்கும் டிசிஎஸ் ஊழியர்
காங்கிரஸ் எம்.பி. சுதாவின் செயின் மீட்பு... கைதான திருடர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com