ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் விறுவிறுப்பாக நடக்கிறது!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைதேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 24.74 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல்
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல்முகநூல்

ராஜஸ்தான் மாநிலத்தில் 199 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல்
ராஜஸ்தான்: முடிவுக்கு வந்த அசோக் கெலாட்-சச்சின் பைலட் மோதல்.. வியூகம் வகுத்த ராகுல்.. நடந்தது என்ன?

இதனிடையே தலைவர்கள் பலரும் தங்களது வாக்கை பதிவு செய்தனர். ராஜஸ்தான் மாநில ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா உதய்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் மேக்வால் பைகானேர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், தனது குடும்பத்தினருடன் ஜோத்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் வாக்களித்தார். முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ரஜே ஹலாவார் வாக்குச்சாவடியில் ஜனநாயக கடமை ஆற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்
“ராஜஸ்தானில் தாமரை மலரும்” என தெரிவித்தார். ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சி.பி. ஜோஷி, சித்தோர்கர் பகுதி வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து தனது வாக்கை செலுத்தினார். பாஜக எம்.பி. சுபாஷ் சந்திர பஹேரியா, தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று பில்வாரா பகுதி வாக்குச்சாவயில் வாக்கு செலுத்தினார்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல்
Rajasthan Election | கெத்து காட்டும் காங்.. முந்த நினைக்கும் பாஜக! கையிலெடுத்த வியூகங்கள் என்ன?
ராஜஸ்தான்
ராஜஸ்தான் கோப்புப் படம்

காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட், ஜெய்ப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட், “ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி
அமையும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் சர்தார்புரா
வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்து சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார். முன்னதாக முன்னோர்கள் வாழ்ந்த வீட்டிற்கு சென்று பார்வையிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com