ராஜஸ்தான்: முடிவுக்கு வந்த அசோக் கெலாட்-சச்சின் பைலட் மோதல்.. வியூகம் வகுத்த ராகுல்.. நடந்தது என்ன?

ராஜஸ்தானில் நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டிருந்த மோதல் முடிவுக்கு வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அசோக் கெலாட், ராகுல், சச்சின் பைலட்
அசோக் கெலாட், ராகுல், சச்சின் பைலட்ட்விட்டர்

நவம்பர் 25: ராஜஸ்தானில் வாக்குப்பதிவு

200 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில், நவம்பர் 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு தற்போது முதல்வராக உள்ள அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் இடையேதான் நேரடி போட்டி உள்ளது.

ராஜஸ்தான்
ராஜஸ்தான் கோப்புப் படம்

தமிழ்நாட்டில் திமுக அறிவித்த இலவச வாக்குறுதி பாணியை, கர்நாடகாவைத் தொடர்ந்து காங்கிரஸ் ராஜஸ்தானிலும் அறிவித்துள்ளது. அதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை, இலவசத்துக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வந்த மத்தியில் ஆளும் பாஜகவே, தற்போது 5 மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அக்கட்சியும் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துள்ளது.

இதையும் படிக்க: 16 பந்துகளில் 20 ரன் தேவை; ஆனாலும் தோனி செய்த மேஜிக்! வைரலாகும் Champions Trophy வின்னிங் மொமண்ட்ஸ்!

அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இணைந்த போஸ்டர்கள்

இந்த நிலையில், ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் ஆகியோரிடம் மோதல் வெடித்து வந்தது. தற்போது அவர்கள் இருவரையும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சமாதானப்படுத்தி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் இணைந்த போஸ்டர்கள் ராஜஸ்தானில் வரிசைகட்டி நிற்கின்றன.

”ஒற்றுமையாக இருக்கிறோம்” - சச்சின் பைலட்

இதுகுறித்து சச்சின் பைலட், “முதல்வர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. தேர்தலில் வெற்றிபெறுவதுதான் எங்கள் முக்கிய குறிக்கோள், முதல்வர் யார் என்பதைத் தேர்தலுக்குப்பின் எம்எல்ஏக்கள் முடிவு செய்வார்கள். இளைஞர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்பதுதான் எமது விருப்பமாகும். கடந்த காலங்களில் அசோக் கெலாட்டுடன் மோதல் இருந்தது. ஆனால், இப்போது நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். ’மறப்போம்.. மன்னிப்போம்.. முன்னேறுவோம்’ என்பதுதான் எங்களது கோஷமாகும். தனிப்பட்ட நபர்களைவிட கட்சியும், பொதுமக்களும்தான் எங்களுக்கு முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: என்ன தவறு செய்தார் சஞ்சு சாம்சன்? ஏன் ஓரங்கட்டுகிறீர்கள்? டிரெண்டாகும் ”Justice for Sanju”!

கர்நாடக காங்கிரஸ் பாணியில் ராஜஸ்தானில் வியூகம்

அதற்கு முன்பு அசோக் கெலாட்டும் படம் ஒன்றைப் பகிர்ந்து, ’ஒன்றாக, நாங்கள் மீண்டும் வெற்றி பெறுவோம்’ எனப் பதிவிட்டிருந்தார். இதையேதான் ராகுல் காந்தியும் தெரிவித்திருந்தார். “நாங்கள் ஒன்றாக இருக்கிறோம், ஒன்றாக இருப்போம். ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெறும்" எனத் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கு முன்புவரை, அம்மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு இடையே பனிப்போர் வெடித்தபடி இருந்தது. அப்போதுகூட டி.கே.சிவக்குமார், ”முதல்வர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை” எனத் தெரிவித்திருந்தார். பின்னர் தேர்தலை முன்னிட்டு, அவர்கள் சண்டையில் ராகுல் காந்தி தலையிட்டு இருவருக்குள்ளும் சமாதானப்படுத்தினார்.

இதையடுத்து, ராகுலின் வியூகம் வெற்றிபெற்றது. தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்ற பின், முதல்வர் ரேஸில் சிக்கல் எழுந்தது.

சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே, டி.கே.சிவக்குமார்
சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே, டி.கே.சிவக்குமார்

இதனால் வெற்றிபெற்றும் காங்கிரஸ் நீண்டநாட்கள் ஆட்சியமைக்காததால் விமர்சனத்துக்குள்ளானது. சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் டெல்லியில் தங்கி மூத்த தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து முதல்வர் யார் என்ற ரேஸிலும் சில சாதகமான பயன்கள் இருவருக்கும் அளிக்கப்பட்டது. அதன்பிறகே, கர்நாடக முதல்வர் யார் என்ற கேள்வி முடிவுக்கு வந்தது. தற்போது அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி சுமுகமாக நடைபெற்று வருவதுடன் சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் உள்ளார்.

இதையும் படிக்க: "அரசியல் எல்லாம் பேசவில்லை. எதார்த்தைப் பேசுகிறேன்" ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசிய முதல்வர் ஸ்டாலின்!

தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும்?

இதே பாணியைத்தான் ராஜஸ்தானிலும் ராகுல் காந்தி கையில் எடுத்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்குப் பின்னும் இதுதான் நடக்கும் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். அதேநேரத்தில், அசோக் கெலாட் ஆதரவு தொகுதிகளில் சச்சின் பைலட் பிரசாரம் செய்யவில்லை என்றும், அதுபோல் சச்சின் பைலட் ஆதரவு தொகுதிகளில் அசோக் கெலாட் பிரசாரம் செய்யவில்லை என்ற தகவலும் எழுந்துள்ளது.

இதனால், இருதரப்பிலும் மனதுக்குள் வன்மம் இருப்பதாகவே காங்கிரஸார் தெரிவிக்கின்றனர். ஒருவேளை காங்கிரஸ் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றால், இவர்களுக்குள் இருக்கும் மோதல் மிகப்பெரிய அளவில் வெடிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com