ராஜஸ்தானில் பரபரப்பாக நடந்த தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 68.24 சதவீத வாக்குப்பதிவு

ராஜஸ்தானில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 68.24 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
rajasthana election
rajasthana electionpt

மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இம்மாதத்தில் மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்துள்ளது. அந்த வகையில், ராஜஸ்தானில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

ராஜஸ்தான்
ராஜஸ்தான்pti

200 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில், 199 தொகுதிகளுக்கு இன்று (நவ.25) வாக்குப்பதிவு நடைபெற்றது. கரம்பூர் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குருகுத் சிங் காலமானதால், அந்தத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் 199 தொகுதிகளில் 183 பெண்கள் உட்பட 1,862 வேட்பாளா்கள் களத்தில் உள்ள நிலையில், அவர்களைத் தேர்வுசெய்யும் பொருட்டு, மாநிலம் முழுவதும் 51,507க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மாநிலம் முழுதும் 5.25 கோடி பேர் வாக்காளர்களாக உள்ளனர். 2.74 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதையடுத்து, வாக்குப்பதிவு ஒரேகட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

இதையும் படிக்க: ஆசியக்கோப்பை யு19 தொடருகான இந்திய அணி அறிவிப்பு - ஜொலிக்கப்போகும் இளம் நட்சத்திரங்கள் யார்? யார்?

மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், அர்ஜூன் ராம் மேக்வால், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர், பாஜக மாநில தலைவர் சி.பி. ஜோஷி உள்ளிட்டோர் காலையிலேயே வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

ட்விட்டர்

அதன்படி, காலை 9.30 மணி நிலவரப்படி 9.77% வாக்குகள் பதிவாகி இருந்தன. அதைத் தொடர்ந்து மதியம் 1 மணி நிலவரப்படி, 40.27 சதவீதம் வாக்குப் பதிவானது. அடுத்து மாலை 3 மணியளவில் 55.63 சதவீத வாக்குகளும் மாலை 5 மணி நிலவரப்படி 68.24 சதவீத வாக்குகளும் பதிவாகின. ஐந்த மாநில தேர்தல் வாக்குப்பதிவுகளும் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்படுகின்றன. நவம்பர் 30ஆம் தேதி தெலங்கானாவில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதையும் படிக்க: மக்களவையில் பேச பணம்: மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கிய சி.பி.ஐ.?

ராஜஸ்தானில் பாஜக - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இங்கு கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ், பாஜக மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. இந்த முறை ஆட்சியை தக்கவைப்போம் என காங்கிரஸ் நம்புகிறது. அடுத்த ஆட்சியை அமைக்க பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

முன்னதாக, சிகர் மாவட்டத்தில் உள்ள பதேபூர் செகாவதி பகுதியில் கல்வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் கூடுதலாக பாதுகாப்பு அளிக்கப்பட்டது. பெரும்பாலும் அமைதியான சூழலில் வாக்குப்பதிவு நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: ”15 கோடி ரூபாய்” - மீண்டும் மும்பை அணியில் இணையும் ஹர்திக் பாண்டியா... இதுதான் பின்னணி காரணமா?

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com