ஆசியக்கோப்பை யு19 தொடருகான இந்திய அணி அறிவிப்பு - ஜொலிக்கப்போகும் இளம் நட்சத்திரங்கள் யார்? யார்?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பைக்கான, இந்திய யு19 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியக்கோப்பை யு19
ஆசியக்கோப்பை யு19ட்விட்டர்

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் டிசம்பர் 8ஆம் தொடங்கி 17 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் (ஏ பிரிவு) ஆப்கானிஸ்தான், நேபாளம், ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் (பி பிரிவு) உள்ளிட்ட 8 அணிகள் விளையாட இருக்கின்றன. இதில் முதல் 4 இடம்பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் விளையாடும். அதில் வெற்றிபெறும் 2 அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.

இதற்கான இந்திய யு19 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கான கேப்டனாக பஞ்சாபைச் சேர்ந்த 19 வயது உதய் சஹாரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பிசிசிஐ தரப்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை ஜூனியர் கிரிக்கெட் குழு தேர்ந்தெடுத்துள்ளது. நடப்பு சாம்பியனான இந்திய அணி ஆசியக் கோப்பைப் போட்டியில் மிகவும் வெற்றிகரமான அணியாக திகழ்கிறது. ஆசியக் கோப்பையை இந்திய அணி 8 முறை வென்றுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இந்திய ‘ஏ’ அணியை வழிநடத்தும் முதல் கேரள வீராங்கனை: கேப்டனாக மின்னு ராணி நியமனம்!

1989, 2003, 2012, 2013/14, 2016, 2018, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி சாம்பியன் கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது. இதில் 2012ஆம் ஆண்டு மட்டும் பாகிஸ்தானுடன் கோப்பையைப் பகிர்ந்துள்ளது.

ஆசியக் கோப்பைக்கான யு-19 இந்திய அணி:

உதய் சஹாரன் (கேப்டன்), அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ர மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியன்ஷு மோலியா, முஷீர் கான், ஆரவெல்லே அவனீஷ் ராவ், சௌமி குமார் பாண்டே (துணைக் கேப்டன்), முருகன் அபிஷேக், இன்னேஸ் மஹாஜன், தனுஷ் கௌதா, ஆரதயா சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி.

இந்தியா மோதும் போட்டி அட்டவணை

டிசம்பர் 7 - இந்தியா யு19 - ஆப்கானிஸ்தான் யு19

டிசம்பர் 9 - இந்தியா யு19 - பாகிஸ்தான் யு19

டிசம்பர் 12 - இந்தியா யு19 - நேபாள் யு19

இதையும் படிக்க: ”15 கோடி ரூபாய்” - மீண்டும் மும்பை அணியில் இணையும் ஹர்திக் பாண்டியா... இதுதான் பின்னணி காரணமா?

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com