வாரணாசியில் மோடி பின்னடைவு.. டஃப் கொடுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்! அதிர்ச்சியில் பாஜக!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி முகநூல்

18ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் கடைசிக்கட்டமாக உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 3வது முறையாகப் போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அதன் மாநிலத் தலைவர் அஜய் ராய், பி.எஸ்.பி. சார்பில் ஏ. ஜமால் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடிpt web

இந்த நிலையில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவைச் சந்தித்து வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் 6,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதனால், பிரதமர் மோடிக்கே காங்கிரஸ் வேட்பாளர் டஃப் கொடுத்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி அஜய் ராய் 11,480 வாக்குகளும், பிரதமர் மோடி 5,257 வாக்குகளும் பெற்றுள்ளனர். மேலும் உத்தரப்பிரதேச தொகுதியில் 30க்கும் மேற்பட்ட இடங்களில், i-n-d-i-a கூட்டணி முன்னிலையில் உள்ளது. தவிர, நாடு முழுவதும் 200க்கும் அதிகமான தொகுதிகளில் i-n-d-i-a கூட்டணி முன்னிலையில் உள்ளது.

இதையும் படிக்க: IPL 2025 மெகா ஏலம்| CSK-ல் இருந்து தோனி வெளியேறும் நிலையா? வில்லனாய் மாறும் புதிய விதிமுறை?

பிரதமர் மோடி
🔴LIVE: மக்களவை தேர்தல் 2024 | வாக்கு எண்ணிக்கை | மோடி வாரணாசியில் பின்னடைவு.. கை ஓங்கும் காங்கிரஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com