பிஹார் தேர்தல்| நாட்டுப்புற பாடகர்களை குறிவைக்கும் கட்சிகள்.. வாக்குகளை கவர புது வியூகம்!
பிஹார் தேர்தலில் பாடகர்கள் மூலம் வாக்குகளை கவர கட்சிகள் ஆர்வம் காட்டிவருகின்றன. அந்தவகையில் நாட்டுப்புறப் பாடகர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிஹார் தேர்தலில் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் நாட்டுப்புற பாடகர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க முக்கிய கட்சிகள் முடிவு செய்துள்ளன.
25 வயதே ஆன பிரபல பாடகி மைதிலி தாக்குர் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்துள்ள நிலையில், அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.
போஜ்புரி பாடகரும் நடிகருமான பவன் சிங்குக்கும் பாஜக வாய்ப்பளிக்கும் எனத் தெரிகிறது. இவர் கடந்த மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்டு தோல்வியை தழுவியவர் ஆவார்.
மற்றொரு போஜ்புரி பாடகரான ஷில்பி ராஜும் சிராக் பஸ்வான் கட்சி சார்பில் வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளார்.
பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் அலோக் குமார் என்ற போஜ்புரி பாடகருக்கு வாய்ப்பளிக்கும் எனத் தெரிகிறது. இக்கட்சியின் முதல் பட்டியலில் ரிதேஷ் ரஞ்சன் பாண்டே என்ற பாடகருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. போஜ்புரி நடிகரும் பாடகருமான மனோஜ் திவாரி ஏற்கெனவே பாஜக சார்பில் எம்.பி.ஆக உள்ளார்.