பொங்கல் விழா
பொங்கல் விழாPt web

டெல்லி | பாஜக நடத்தும் பொங்கல் விழாவில் ’பராசக்தி’ படக்குழு.!

டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் இல்லத்தில் நடைபெற்று வரும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடியுடன் பராசக்தி படக்குழுவினர் கலந்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Published on

தமிழர் திருநாளான பொங்கலை பண்டிகையையொட்டி டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல். முருகன் வீட்டில் பொங்கல் கொண்டாட்டம் இன்று நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடியுடன், தமிழக பாஜக நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தைப் பற்றிப் பேசியிருக்கும் ’பராசக்தி’ படக்குழுவினர் இவ்விழாவில் கலந்து கொண்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

பொங்கல் விழாவில் சிவகார்த்திக்கேயன் மற்றும் ரவி மோகன்
பொங்கல் விழாவில் சிவகார்த்திக்கேயன் மற்றும் ரவி மோகன்Pt web

டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடைபெறும் பொங்கல் விழாவில், சிவகார்த்திக்கேயன், ரவி மோகன் மற்றும் ஜி.வி பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றிருக்கின்றனர். 1967-ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முக்கியக் காரணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டு வரும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டதைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கும் பரசாக்தி படத்தைச் சார்ந்த படக்குழுவினரை இவ்விழாவிற்கு அழைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும், பராசக்தி படக்குழுவினருக்கான அழைப்பு பிரதமர் தரப்பிலிருந்தே வந்ததாக கூறப்படுகிறது.

பொங்கல் விழா
விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் | ’தெறி’ படமும் பொங்கலுக்கு இல்லை.. ஒத்திவைப்பதாக அறிவிப்பு!

முன்னதாக, பராசக்தி படத்தில் காங்கிரஸ் கட்சியை தவறான வகையில் சித்தரித்திருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள். மேலும், நேற்று ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசியிருந்தார். இந்த நிலையில் தான், பிரதமர் மோடி கலந்து கொண்டிருக்கும் இன்றைய பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

பொங்கல் விழா
தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்., ஜனநாயக பட விவகாரத்தில் ராகுல் காந்தி விஜய்க்கு ஆதரவு.!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com