மும்பை ஏர்போர்ட்டில் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்த பாகிஸ்தான் பெண்
பாகிஸ்தான் பெண்web

’இந்தியாவிற்கு பயத்தோடு வந்த பாகிஸ்தான் பெண்..’ பாசத்தால் நனைத்த மும்பை!

தன்னுடைய பையில் வைத்திருந்த ஒரு "சந்தேகத்திற்குரிய" பொருள் குறித்து தன்னிடம் கேட்கப்பட்டதாகவும், அப்பாகிஸ்தான் பெண் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டார். அது ஒரு பவர்பேங்க் என்று அவர் வெளிப்படுத்தினார்.
Published on
Summary

லண்டனிலிருந்து நேபாளம் செல்லும் வழியில் மும்பை விமான நிலையத்தில் 10 மணி நேரம் இடைநிறுத்தத்தில் இருந்த பாகிஸ்தான் பெண், பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருப்பதால் இந்தியாவில் எப்படி நடத்துவார்கள் என்ற அச்சத்தில் இருந்தார். ஆனால் மும்பை விமான நிலைய ஊழியர்களின் அன்பும் மரியாதையும் அவரை கவர, இன்ஸ்டாகிராமில் தனது அனுபவத்தை பகிர்ந்து மீண்டும் இந்தியா வர விருப்பம் தெரிவித்தார்.

லண்டனிலிருந்து மும்பை வழியாக நேபாளம் சென்ற பாகிஸ்தான் பெண், 10 மணிநேரம் மும்பை ஏர்போர்ட்டில் இடைநிறுத்தத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது பாகிஸ்தான் பாஸ்போர்ட் உடன் இந்தியாவில் எப்படி இருக்கப்போகிறோம், நம்மை எப்படி நடத்துவார்கள் என்ற பயத்துடன் இருந்தவருக்கு மும்பை அவரை அன்பால் நனைத்துள்ளது.

மும்பை விமான நிலைத்தில் ஏற்பட்ட தன்னுடைய அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தியிருக்கும் அப்பாகிஸ்தான் பெண், மீண்டும் இந்தியாவிற்கு வர விரும்புவதாக பதிவிட்டுள்ளார்.

மும்பை ஏர்போர்ட்டில் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்த பாகிஸ்தான் பெண்
ஒருநாள்கூட முழுசா முடியல.. ஹார்முஸிலிருந்து வெளியேறும் கப்பல்கள்.. தடுக்க முடியாமல் திணறும் US?

அவர் பதிவிட்டிருக்கும் இன்ஸ்டா போஸ்ட்டில், “என் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு பயணத்தில் இருக்கிறேன், என்னுடைய இணைப்பு விமானம் மும்பையிலிருந்துதான் புறப்படுகிறது.

ஒரு பாகிஸ்தானியராக இந்த பயணம் இந்தியாவில் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள, எல்லாம் சரியாக இருக்குமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, ஒரு மாதத்திற்கு முன்பே நான் இண்டிகோவைத் தொடர்புகொண்டேன். அப்போது, ​​ஒரு பாகிஸ்தானியர் என்ற முறையில், நீங்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேறாத வரை, எங்கள் வழித்தடத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அவர்கள் உறுதியளித்தார்கள்.

நான் நினைத்ததை விட பயணம் நன்றாகவே இருந்தது. எனது அனுபவம் அருமையாக இருந்தது, நான் மும்பையைப் பார்த்தேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை (அது வெகு தொலைவிலிருந்து பார்த்தாலும் கூட). பொதுவாக அனைத்து ஊழியர்களும் அருமையாக இருந்தனர், மேலும் எனது பையில் இருந்த சந்தேகத்திற்கிடமான பொருள் குறித்து என்னை அழைத்ததைத் தவிர, எனக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்தது” என்று பதிவிட்டுள்ளார்.

மும்பை ஏர்போர்ட்டில் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்த பாகிஸ்தான் பெண்
போர்க் கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணை.. வடகொரியாவின் அதிரடி சோதனை US-க்கு சவாலா?

அவருடைய பதிவில் எதிர்வினையாற்றியிருக்கும் நெட்டிசன்கள், "மும்பை விமான நிலையத்தில் நீங்கள் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்ததில் மகிழ்ச்சி! உண்மையான மனிதர்களையும் உண்மையான அனுபவங்களையும் காட்டும் இதுபோன்ற உள்ளடக்கங்கள் நமக்குத் தேவை" என்று ஒரு பயனர் கமண்ட் செய்துள்ளார்.

அதோபோல மற்றொருவர், "இந்தியாவில், பவர் பேங்குகளை கேபின் லக்கேஜில் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. உங்கள் பயணம் இனிமையாக அமைந்திருக்கும் என நம்புகிறேன். பாதுகாப்பான பயணமாக அமையட்டும்" என மற்றொரு பயனர் எழுதினார்.

மற்றொருவர், "மும்பைக்கு நல்வரவு... நீங்கள் புகழ்பெற்ற வடாபாவ் அல்லது மிசால் பாவ் உணவைச் சுவைத்திருப்பீர்கள் என நம்புகிறேன்" என்று எழுதினார்.

மும்பை ஏர்போர்ட்டில் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்த பாகிஸ்தான் பெண்
’உங்கள் நாட்டின் அழகான பெண்ணும்.. பணமும் வேண்டும்’ துருக்கியை மிரட்டிய ராணுவ தளபதி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com