Iran linked five ships US sanctioned defy hormuz blockade
ஹார்முஸ்எக்ஸ் தளம்

ஒருநாள்கூட முழுசா முடியல.. ஹார்முஸிலிருந்து வெளியேறும் கப்பல்கள்.. தடுக்க முடியாமல் திணறும் US?

அமெரிக்க ராணுவம் ஈரானின் தெற்குக் கடல் பகுதியில் இருந்து 200 கிமீ தொலைவில் ஓமன் வளைகுடாவில் அணு ஆயுதம் தாங்கிய ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலையும் அத்துடன் மேலும் 2 போர்க் கப்பல்களையும் நிறுத்தியுள்ளது.
Published on

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க ராணுவ முற்றுகையை மீறி சீன கப்பல் வெற்றிகரமாக கடந்த நிலையில், மேலும் சில கப்பகல்கள் இந்த வழிப்பாதையைக் கடந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது, அமெரிக்காவுக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. தவிர, அவர்களின் ராணுவ பலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பாக ஈரான் - அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியில் அனைத்துக் கப்பல்களையும் அமெரிக்கா முற்றுகையிடும் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை, நேற்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்காக அமெரிக்க ராணுவம் ஈரானின் தெற்குக் கடல் பகுதியில் இருந்து 200 கிமீ தொலைவில் ஓமன் வளைகுடாவில் அணு ஆயுதம் தாங்கிய ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலையும் அத்துடன் மேலும் 2 போர்க் கப்பல்களையும் நிறுத்தியுள்ளது.

Iran linked five ships US sanctioned defy hormuz blockade
china shipx page

எனினும், அமெரிக்காவின் இந்த முற்றுகை நடவடிக்கை தோல்வியுற்றிருப்பதாகவே வல்லுநர்கள் கருதுகின்றனர். முன்னதாக, ’ரிச் ஸ்டாரி’ என்ற நடுத்தர அளவு கொண்ட சீனாவின் எண்ணெய் கப்பல், இன்று ஹார்முஸ் பகுதியை வெற்றிகரமாகக் கடந்து, தற்போது ஓமன் வளைகுடாவில் உள்ளது. மலாவி நாட்டுக் கொடியின்கீழ் பயணித்த அந்தக் கப்பலில் சீனக் குழுவினர் இருப்பதாக அறிவித்த பிறகு, அது ஹார்முஸ் வழியைக் கடந்துள்ளது. அமெரிக்க ராணுவ முற்றுகைக்குக் கடந்த முதல் கப்பல் இதுவே ஆகும். இது, அமெரிக்காவுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்பட்ட நிலையில், மேலும் சில கப்பகல்கள் இந்த வழிப்பாதையைக் கடந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Iran linked five ships US sanctioned defy hormuz blockade
அமெரிக்காவுக்கு தண்ணி காட்டிய சீனா.. எச்சரிக்கையை மீறி ஹார்முஸை கடந்த கப்பல்.. ஈரான் கேலி!

இந்த கடற்படை முற்றுகையின் முதல் நாளிலேயே, ஈரானுடன் தொடர்புடைய நான்கு எண்ணெய்க் கப்பல்களும் ஒரு சரக்குக் கப்பலும் ட்ரம்பின் எச்சரிக்கையை மீறி ஹார்முஸைக் கடந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பனாமா கொடியை ஏந்திய 'பீஸ் கல்ஃப்', மடகாஸ்கர் கொடியை ஏந்திய முர்லிகிஷன், லைபீரியக் கொடியை ஏந்திய 'எல்பிஸ்’உள்ளிட்ட 5 கப்பல்கள் வெளியேறி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த கப்பல்கள், ஈரானிய துறைமுகத்திலிருந்து புறப்பட்டபோதிலும், அவற்றை அமெரிக்கக் கடற்படை இடைமறிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.

Iran linked five ships US sanctioned defy hormuz blockade
hormuz Pt web

அதேநேரத்தில், இந்தக் கப்பல்கள் தங்கள் இருப்பிடங்களை மறைப்பதற்காக, 'ஸ்பூஃபிங்' எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் தவறான இருப்பிட அறிக்கைகளை ஒளிபரப்பியிருக்கக்கூடும் என்று பிபிசி குறிப்பிடுகிறது. எனினும், அமெரிக்கா சக்தி வாய்ந்த முற்றுகை நடவடிக்கையை மீறி, 5 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்திருப்பது அதிபர் ட்ரம்புக்கு மேலும்மேலும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. தவிர, அமெரிக்காவின் ராணுவ பலமும் கேள்விக்குறியாகி உள்ளது. ஏற்கெனவே சீனாவின் முதல் கப்பல் சென்ற நிலையில், ஈரான் அமெரிக்காவை மோசமாக கேலி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Iran linked five ships US sanctioned defy hormuz blockade
ஈரானா.. அமெரிக்காவா? போர் நிறுத்தம் குறித்து சீனாவின் 4 அம்சத் திட்டம்.. யாருக்குச் சாதகம்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com