csk vs pbks| டக் அவுட் ஆன தோனி.. உற்சாகத்தில் கை தட்டிய ப்ரீத்தி ஜிந்தா.. #ViralVideo

பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வீரர் தோனி, கோல்டன் டக் அவுட் ஆனதை, ப்ரீத்தி ஜிந்தா கைதட்டி உற்சாகமாக கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தோனி, ப்ரீத்தி ஜிந்தா
தோனி, ப்ரீத்தி ஜிந்தாட்விட்டர்

அதிரடிக்கும் சரவெடிக்கும் பெயர்போன நடப்பு ஐபிஎல் தொடர், அடுத்தகட்டத்தை நெருங்கியுள்ளது. அந்த வகையில், நேற்று நடைபெற்ற 53வது லீக் போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்திய சென்னை அணி, 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. எனினும், இந்தப் போட்டியில் சென்னை ரசிகர்களால் ‘தல’ எனச் செல்லமாய் அழைக்கப்படும் தோனி, 9-வது பேட்டரகாகக் களமிறங்கியது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசிகட்டத்தில் அவர், எந்த வரிசையில் இறங்கினாலும் எப்படியும் 2 சிக்ஸர்களையாவது அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், 19வது ஓவரில் ஹர்ஷல் படேல் வீசிய 5வது பந்தில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்ததுடன், கோல்டன் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியது அவரது ரசிகர்களைப் பெரிதும் ஏமாற்றத்திற்குள்ளாகியது.

'தோனி, தோனி' எனக் குரல் கொடுத்து உற்சாகத்துப்படும் மைதானம், நேற்று மயான அமைதியைக் கண்டது. இதனால் தோனி இறங்கிய இடம் குறித்து, கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதுஒருபுறமிருக்க, அவர் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி வெளியேறியதை பஞ்சாப் அணி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக, நடிகையும் அவ்வணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா எழுந்து நின்று கை தட்டி உற்சாகத்தில் கரைபுரண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: CSK Vs SRH|ஃபீல்டிங் அமைத்த தோனி.. வீழ்ந்த டிராவிஸ் ஹெட்.. ஷாக் ஆன காவ்யா மாறன்! #Videoviral

தோனி, ப்ரீத்தி ஜிந்தா
“அந்த இடம் என்றால் தோனி விளையாடவே வேண்டாம்.. வேகப்பந்து வீச்சாளரை சேர்ப்பது நல்லது” - ஹர்பஜன் சிங்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com