மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் தேர்தல் - முக்கிய வேட்பாளர்கள் யார்? போட்டியிடும் தொகுதிகள் என்ன?

மத்தியபிரதேசம், சத்தீஸ்கரில் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் களைகட்டிய நிலையில், அங்கு போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்கள், அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பார்க்கலாம்
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் தேர்தல்
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் தேர்தல்pt web

மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் தேர்தல்

ஐந்து மாநில தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நவம்பர் 7-ஆம் தேதி மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாகத் தேர்தலும், சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் முதற்கட்டமாக 20 தொகுதிகளிலும் தேர்தல் நடந்தது.

இந்நிலையில் இன்று நவம்பர் 17-ஆம் தேதி மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 தொகுதிக்ளில் ஒரே கட்டமாகவும், சத்தீஷ்கர் மாநிலத்தில் எஞ்சியுள்ள 70 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது.

மத்தியபிரதேசம் பாஜக

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடி மோதல் உள்ளது. பாஜக சார்பில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், முன்னாள் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் பட்டேல், ஃபாக்கான் சிங் குலாஸ்தே ஆகியோரும், கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா, உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா ஆகியோரும் முக்கிய வேட்பாளர்களாக கவனிக்கப்படுகின்றனர்.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் தேர்தல்
Soft Hindutva-வை கையிலெடுக்கும் காங்? வேலையற்ற நிலையில் 39 லட்சம் மக்கள்...ம.பி. தேர்தல் களம்

இதில் சிவராஜ் சிங் சவுகான் - புத்னி தொகுதியிலும், நரேந்திரசிங் தோமர் - திம்னி தொகுதியிலும், பிரகலாத் சிங் படேல் - நர்சிங்கபுரம் தொகுதியிலும், ஃபாக்கான் சிங் குலாஸ்தே - நிவாஸ் தொகுதியிலும், கைலாஷ் விஜய்வர்கியா - இந்தூர் 1 தொகுதியிலும், நரோத்தம் மிஷ்ரா - டாடியா தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

மத்திய பிரதேசம் காங்கிரஸ்

காங்கிரஸ் வேட்பாளர்களில் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், லஹர் தொகுதியில் 7 முறை வெற்றிபெற்ற கோவிந்த் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்கின் மகனான ஜெய்வர்தன் சிங், முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை எதிர்த்து போட்டியிடும் நடிகர் விக்ரம் மஸ்தல் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாக பார்க்கப்படுகின்றனர்.

கமல்நாத் - சிந்த்வாரா தொகுதியிலும், கோவிந்த் சிங் - லஹர் தொகுதியிலும், ஜெய்வர்த்தன் சிங் - ராகோகர் தொகுதியிலும், விக்ரம் மஸ்தல் - புத்னி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

சத்தீஸ்கர் காங்கிரஸ்

காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 20இல் ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அடுத்து 70 தொகுதிகளில் 2ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் முதலமைச்சர் பூபேஷ் பாகல், துணை முதலமைச்சர் டி. எஸ் சிங் டியோ, அமைச்சர்கள் அமர்ஜித் பகத், உமேஷ் படேல், ஜெய்சிங் அகர்வால் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர்.

பூபேஷ் பகல் - பதான் தொகுதியிலும், டி.எஸ். சிங் டியோ - அம்பிகாபூர் தொகுதியிலும், அமர்ஜித் பகத் - சிடாபூர் தொகுதியிலும், உமேஷ் படேல் - கர்சியா தொகுதியிலும், ஜெய்சிங் அகர்வால் - கொர்பா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

சத்தீஸ்கர் பாஜக

பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் அக்கட்சியின் மாநில தலைவர் அருண் சாவ், மாநில துணை தலைவர் லக்ஹன்லால் தேவாங்கன், முதலமைச்சர் பூபேஷ் பாகலை எதிர்த்து போட்டியிடும் அவரது மருமகன் விஜய் பாகல், முன்னாள் அமைச்சர் பிரிஜ் மோகன் அகர்வால், முன்னாள் மத்திய இணை அமைச்சர் ரேணுகா சிங், நாராயண் சந்தல் ஆகியோர் 2ஆம் கட்ட தேர்தலில் பாஜக சார்பில் களம் காண்பவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

இதில் அருண் சாவ் - லோர்மி தொகுதியிலும், லக்ஹன்லால் தேவாங்கன் - கொர்பா தொகுதியிலும், விஜய் பாகல் - பதான் தொகுதியிலும், பிரிஜ் மோகன் அகர்வால் - ராய்பூர் நகரம் மேற்கு தொகுதியிலும், ரேணுகா சிங் - பாரத்பூர் சோன்ஹட் தொகுதியிலும், நாராயண் சந்தல் - ஜாஞ்ச்கிர் சம்பா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com