“நான் கேட்டது சிக்கன் பிரியாணி.. ஆனா கெடச்சது பல்லி பிரியாணி” ஹைதராபாத்தில் அதிர்ச்சி

ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணியுடன் வந்து சேர்ந்த பல்லி.. சிக்கன் பிரியாணியை ஃபுட் டெலிவரி நிறுவனம் மூலம் வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்த ஹோட்டல்.. எங்கு நடந்தது? முழு விவரத்தை பார்க்கலாம்.
பிரியாணி
பிரியாணிபுதியதலைமுறை

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஆர்டிசி கிராஸ் ரோட்டில் பவர்ச்சி என்ற பெயரில் பிரபல அசைவ உணவகம் ஒன்று உள்ளது. ஃபுட் டெலிவரி நிறுவனத்தில் வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்த நிலையில், அந்த உணவகத்தில் இருந்து உணவு பெறப்பட்டு டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

Biryani
Biryanipt desk

வீட்டுக்கு பார்சலாக வந்த சிக்கன் பிரியாணியை பிரித்து பார்த்த வாடிக்கையாளர், அதில் இறந்து போன பல்லி ஒன்று கிடைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி வாடிக்கையாளர் ஓட்டல் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, ஓட்டல் ஊழியர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே அந்த வாடிக்கையாளர் ஹோட்டலுக்கு சென்று அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி உணவுத்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் அந்த வாடிக்கையாளர் புகார் அளித்த நிலையில், அங்கு சென்ற உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ஓட்டலில் ஆய்வு நடத்தி மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளனர்.

மேலும், ஓட்டல் சமையல் அறை சுகாதாரமாக இல்லாத நிலையில், ஓட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு, பல்லியோடு டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரியாணி
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி... ஆனாலும் பயம் தேவையில்லை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com