ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு - தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு - தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்pt web

பணக்கார முதலமைச்சர்களின் பட்டியல்.. முதலிடத்தில் சந்திரபாபு; தமிழ்நாடு முதலமைச்சரின் இடம் என்ன?

இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு முதலிடம் பிடித்துள்ளார். மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி கடைசி இடத்தில் உள்ளார்.
Published on

இந்தியாவின் பணக்கார முதலமைச்சராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இருப்பது, ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு, அனைத்து முதலமைச்சர்களின் தேர்தல் பிரமாண பத்திரத்தை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடுமுகநூல்

அதன்படி, இந்தியா முதலமைச்சர்களின் சராசரி வருடாந்திர வருமானம், கடந்த நிதியாண்டில் 13 லட்சத்து 64 ஆயிரத்து 310 ரூபாயாக இருந்துள்ளது. இது இந்தியாவின் தனிநபர் வருவாயைவிட 7.3 மடங்கு அதிகமாகும். முதலமைச்சர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பானது, ஆயிரத்து 630 கோடி ரூபாயாக உள்ளது.

இந்தியாவிலேயே பணக்கார முதலமைச்சராக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளார். அவரது சொத்து மதிப்பு 931 கோடி ரூபாயாக உள்ளது. அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு, 332 கோடி ரூபாய் சொத்துக்களுடன் 2ஆம் இடம் வகிக்கிறார். மூன்றாவது இடத்தில் சுமார் 51 கோடி சொத்துக்களுடன், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு - தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை என பெற்றோர் புகார் - ஓட்டுநர் போக்சோவில் கைது

இந்த பட்டியலில் கடைசி 3 இடங்களில் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளனர். பினரயி விஜயனின் சொத்து மதிப்பு 1 கோடியே 18 லட்ச ரூபாயாகவும், ஒமர் அப்துல்லாவின் சொத்து மதிப்பு சுமார் 55 லட்ச ரூபாயாகவும், மம்தா பானர்ஜியின் சொத்து மதிப்பு வெறும் 15 லட்ச ரூபாயாகவும் உள்ளது. இந்த பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், 8 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் 14 இடத்தில் உள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு - தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
வந்தார் கம்பீர்.. கூடவே வந்தது தோல்விகள்! இந்திய அணி சந்தித்த சறுக்கல்கள் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com