கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீர்web

வந்தார் கம்பீர்.. கூடவே வந்தது தோல்விகள்! இந்திய அணி சந்தித்த சறுக்கல்கள் என்ன?

கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு இந்திய அணி, பல்வேறு சறுக்கல்களை சந்தித்துள்ளது. கடந்த காலங்களில் வைத்திருந்த வரலாற்று சாதனைகளை நடப்பாண்டில் இழந்துள்ளது இந்தியா...
Published on

2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டார். அதன் தொடக்கத்தில் வெற்றிகளை பெற்ற இந்திய அணி அதன் பிறகு முக்கிய போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விகள் இந்திய வரலாற்றில் வடுவாக அமைந்துள்ளது.

கம்பீர்
கம்பீர்web

இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இந்தியா 2-ல் தோல்வியை சந்தித்தது. ஒரு போட்டி சமனில் முடிந்தது. இதனால், 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது. இது ஒரு புறம் இருக்க, 2024 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டியில் ஒரு வெற்றியைக் கூட இந்தியா பெறவில்லை என்ற மோசமான வரலாற்றை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கவுதம் கம்பீர்
பேச்சுவார்த்தையில் ஏற்படாத உடன்பாடு: அதானி நிறுவன டெண்டரை ரத்து செய்த தமிழக அரசு

நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-0 என படுதோல்வி அடைந்த இந்தியா, சொந்த மண்ணில் 12 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை இழந்தது. அதேபோல், 24 ஆண்டுகளுக்கு பிறகு ஒயிட்வாஷ் செய்யப்பட்டது இந்தியா.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி

நியூஸிலாந்துக்கு எதிராக 46 ரன்களில் சுருண்டு, சொந்த மண்ணில் குறைந்த டெஸ்ட் ரன்களை இந்தியா பதிவு செய்தது. ஆசியாவிலேயே இதுதான் ஒரு அணியின் குறைந்த டெஸ்ட் ரன்களாம். பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்துள்ளது இந்தியா. பார்டர் கவாஸ்கர் தொடரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 2 போட்டிகளில் தோல்வி அடைந்தும் இந்திய அணி பெரும் சரிவை சந்தித்துள்ளது.

கவுதம் கம்பீர்
பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க தலிபான் தடை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com